5 கால்பந்து உலக கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் கிறிஸ்டியானா ரொனால்டோ.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் இவர்கள் தங்கள் அணிகளுக்கு கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் இருப்பதால் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி மீதும் அவர்களது அணிகளான போர்ச்சுகல் மற்றும் அர்ஜெண்டினா மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அர்ஜெண்டினா அணி சவுதி அரேபியாவிடம் முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆனால் போர்ச்சுகல் அணி நேற்று கானாவுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
undefined
இந்த போட்டியில் போர்ச்சுகலுக்கு முதல் கோலை அடித்தார் கிறிஸ்டியானா ரொனால்டோ. ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார் ரொனால்டோ. இது சர்வதேச கால்பந்து விளையாட்டில் போர்ச்சுகல் அணிக்காக அவர் அடித்த 118வது கோல் ஆகும்.
5 கால்பந்து உலக கோப்பைகளில் கோல் அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் கிறிஸ்டியானா ரொனால்டோ. இதற்கு முன் பீலே, ஜெர்மனி வீரர் யுவே சீலர் மற்றும் மிரோஸ்லவ் க்ளோஸ் ஆகிய மூவரும் 4 உலக கோப்பைகளில் கோல் அடித்துள்ளனர். அவர்களின் சாதனையை முறியடித்து 5 உலக கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
FIFA World Cup 2022: கேம்ரூனை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி
மேலும், கால்பந்து உலக கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக கோல் அடித்த இளம் மற்றும் வயது அதிகமான வீரர் ரொனால்டோ தான். 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பையில் ஈரானுக்கு எதிராக உலக கோப்பையில் தனது முதல் கோலை அடித்தார் ரொனால்டோ. அப்போது அவருக்கு 21 வயது. இப்போது இந்த உலக கோப்பையில் கானாவுக்கு எதிராக கோல் அடித்தபோது அவரது வயது 37 ஆகும்.