உலகக்கோப்பை கால்பந்து போட்டி... கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போர்ச்சுகல் அணி!!

By Narendran S  |  First Published Nov 25, 2022, 12:54 AM IST

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் எச் பிரிவில் கானா அணியை போர்ச்சுகல் அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 


ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் எச் பிரிவில் கானா அணியை போர்ச்சுகல் அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் எச் பிரிவில் உள்ள போர்ச்சுகல் - கானா அணிகள் மோதின. இந்த ஆட்டம் ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை என்பதால் போர்ச்சுகல் அணியின் வெற்றியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் ஆட்டம் ஆரம்பித்த 35வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி, ஒரு கோலை அடித்தது. இதனை ரொனால்டோ அடித்தார். ஆனால் அந்த கோலை, நடுவர்கள் ஓவர்ரூல் செய்ததால் முதல் பாதி ஆட்டம் 0-0 என்று கோல் அடிக்காமல் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க: கேம்ரூனை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி

Tap to resize

Latest Videos

undefined

அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதில் இருந்து போர்ச்சுகல் - கானா ஆகிய இரு அணிகளும் கோல அடிக்க முயற்சித்தனர். 65வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த பெனால்டியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார். இதன் மூலம் 5 வெவ்வேறு உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார். கானா அணியின் ஆண்ட்ரே அயோ 73வது நிமிடத்தில் கோல் அடித்து, ஆட்டத்தில் 1-1 என்ற சமநிலை செய்தார். இதன் பின்னர் போர்ச்சுகல் அணி 78வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 80வது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் அடித்தது.

இதையும் படிங்க: களைகட்டும் கால்பந்து உலக கோப்பை..! பெரிய அணிகள் அதிர்ச்சி தோல்வி.. அசத்தும் சிறிய அணிகள்

இதன்பின்னர் 90வது நிமிடத்தில் கானா அணியின் இரண்டாவது கோலை அடித்தது. இதனால் ஆட்டத்தில் 3-2 என்ற நிலை ஏற்பட்டது. பின்னர் இரண்டாம் பாதி முடிவுக்கு வந்த நிலையில், 9 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. கூடுதல் நிமிடங்களில் கானா அணி இன்னொரு கோல் அடித்து சமன் செய்ய தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால் கானா அணியின் முயற்சியை போர்ச்சுகல் அணி வீரர்களும், கோல் கீப்பரும் சிறப்பாக தடுத்தனர். இறுதியாக போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குரூப் எச் பிரிவில் போர்ச்சுகல் அணி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!