மகனுக்காக கிராமம் கிராமமாக திண்ணைப் பிரசாரம்... ரணகளம் பண்ணும் ராமதாஸ்

By sathish kFirst Published Apr 17, 2019, 10:34 AM IST
Highlights

மகனுக்காக மட்டும், தர்மபுரியில், ராமதாஸ், திண்ணை பிரசாரம் மேற்கொண்டதால், மற்ற தொகுதிகளில் போட்டியிடும், பாமக வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் தருமபுரியில் மட்டும் தனி கவனம் செலுத்த பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.  

மகனுக்காக மட்டும், தர்மபுரியில், ராமதாஸ், திண்ணை பிரசாரம் மேற்கொண்டதால், மற்ற தொகுதிகளில் போட்டியிடும், பாமக வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் தருமபுரியில் மட்டும் தனி கவனம் செலுத்த பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.  

அதிமுக கூட்டணியில் ஏழு தொகுதியில் போட்டியிடுகிறது பாமக. இந்த தொகுதிகளில்,திமுகவை எதிர்த்து பாமக, நேரடியாக மோதுகிறது. தன் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ராமதாஸ் பிரசாரம் செய்தார். அவரது மகன் அன்புமணி போட்டியிடும், தர்மபுரிக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ராமதாஸ். ராமதாஸ் இங்கு முகாமிட்டுள்ளதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. 

பிஜேபி தேமுதிகவுடன் கூட்டணி போட்டே ஜெயித்த அன்புமணிக்கு  இந்த முறை சில சிக்கல்கள் எழுந்துள்ளது. பாமகவை வீழ்த்த  திமுக தரப்பில் போட்டியிடுபவர் டாக்டர் செந்தில்குமார். இவர் வன்னியர் என்பதால் ஓட்டுக்கள் அப்படியே பாதியாக பிரிய வாய்ப்புள்ளது. இதனால் டென்ஷனில் இருக்கிறாராம் ராமதாஸ். அதிமுகவோ இடைத்தேர்தலில் கவனம் செலுத்துகிறது. 

இது போக, காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் பாமக மீது அதிருப்தியில் உள்ளதால், கட்சி வாக்கும் சிதறும் என சொல்கிறார்கள். காடுவெட்டி குறு ஆதரவாளர்கள் அப்படியே வேல்முருகனுக்கு ஆதரவு தருவதால் வேல்முருகனோ தற்போது திமுக பக்கம் என்பதால், பாமக ஓட்டுகள் பாதியாக பிரியும் வாய்ப்புள்ளது.   

இப்படிப்பட்ட சூழலில், ராமதாஸ் இங்கு வந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.  இந்த தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து வருகிறாராம் ராமதாஸ். அது தொலைதூர கிராமங்களாக இருந்தாலும் ஒரு கிராமங்கள் கூட விடாமல் காரில் பயணித்து வன்னியர் மக்களை என்பதால், இதை எதிர்பார்த்த, மற்ற வேட்பாளர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

click me!