Anbumani  

(Search results - 537)
 • anbumani

  politics21, May 2020, 3:48 PM

  ஆபத்தை விலைகொடுத்து வாங்காதீர்கள்..! மத்திய அரசை எச்சரிக்கும் அன்புமணி..!

  பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் பூவுலகை அடுத்தடுத்துத் தாக்கத் தொடங்கிவிட்டன. இந்த நேரத்தில் நமது கவனம் முழுவதும் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காப்பதில்தான் இருக்க வேண்டும். ஆகையால், ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் நிலக்கரிக் கொள்கையை இந்திய அரசு கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், அதன் மூலமாக புவி வெப்பமாதலின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 • anbumani

  politics21, May 2020, 8:37 AM

  ஊடகத்துறைக்காக களத்தில் குதிக்கும் பாமக..! அரசிடம் அதிரடி கோரிக்கை..!

  அச்சு ஊடகங்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவது உண்மை; அதேபோன்று அவர்கள் அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. செய்தித்தாள்களின் தயாரிப்பு செலவு அதன் விற்பனை விலையை விட பல மடங்கு அதிகம் எனும் நிலையில், அதிக அளவில் விளம்பரங்கள் வந்தால் மட்டும் தான் தயாரிப்பு செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை சமன் செய்ய முடியும். 

 • anbumani contest rajyasabha MP election

  politics8, May 2020, 9:08 PM

  9550-ல் 371 இடங்கள்தானா.? மருத்துவ இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக அநீதி.. கொந்தளிக்கும் அன்புமணி!

  இந்த இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்திருந்தால், அதில் 50% இடங்கள், அதாவது 440 இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இப்போது கிடைத்துள்ள இடங்களை அளவீடாக கொண்டால், 440 இடங்கள் கிடைக்க வேண்டியதற்கு பதிலாக 33 இடங்கள் மட்டும் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கக்கூடும். இதை விட பெரிய சமூக அநீதி இருக்க முடியாது.
   

 • Anbumani contest MP election

  politics6, May 2020, 8:18 PM

  ஜெயலலிதாவே படிப்படியா மதுவிலக்குன்னு சொன்னாரே.. அந்த வாய்ப்பை விடலாமா..? ஈபிஎஸுக்கு ஞாபகப்படுத்தும் அன்புமணி!

  தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பதற்காக தமிழக அரசு சார்பில் கூறப்படும் காரணம் ஏற்கத்தக்கது அல்ல. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று மது அருந்துவது இயல்பாக நடைபெறும் ஒன்றுதான். இரு மாநிலங்களின் எல்லைகளை ஒரு சாலையோ, ஒரு வீதியோ மட்டும்தான் பிரிக்கும் என்ற சூழலில் எல்லையில் உள்ளவர்கள்தான் அண்டை மாநிலத்திற்கு செல்வார்கள். இது புறக்கணிக்கத்தக்க அளவில் மிகச் சில பகுதிகளில் விதிவிலக்காக நடக்கும் நிகழ்வே. இதையே விதியாகக் கருதிக் கொண்டு சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளைத் திறப்பது உடல்நலக் கேடுகளையும், சமூக நலக் கேடுகளையும், சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதுடன், குற்றங்கள் அதிகரிப்பதற்கும்தான் வழி வகுக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.
   

 • anbumani

  politics3, May 2020, 8:32 AM

  கோயம்பேட்டிலிருந்து யாருக்கெல்லாம் கொரோனா பரவுச்சோ..கண்டுபிடிக்கலைன்னா நிலைமை மோசமாயிடும்.. அன்புமணி வார்னிங்!

  கோயம்பேடு சந்தையில் பணியாற்றி கடலூர் மாவட்டத்திற்கு திரும்பிய இரு தொழிலாளர்களுக்கு நேற்று முன்நாள் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று காலை மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் தவிர கோயம்பேடு சந்தையில் பணியாற்றி திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என கடலூர் மாவட்டத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் எவ்வளவு பேருக்கு கொரோனா உறுதியாகும் எனத் தெரியவில்லை.
   

 • semmalai beat admk cadre

  politics29, Apr 2020, 9:12 PM

  சென்னையில் தீவிர கண்காணிப்பை தாண்டியும் கொரோனா பரவுது... அலாரம் அடித்து எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்!

  சென்னையில் நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். எந்தத் தேவைக்காகவும் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை நிலையங்களை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும். எனவே, வீடு வீடாக ஆய்வு, அதிக எண்ணிக்கையிலான சோதனைகள், சமூக இடைவெளியை பராமரித்தல் - கபசுரகுடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • tasmac

  politics27, Apr 2020, 6:48 PM

  ஊரடங்கும் முடியும் நாளில் குடிமகன்களுக்கு அதிர்ச்சி.... எடப்பாடிக்கு ஐடியா கொடுக்கும் டாக்டர் அன்புமணி..!

  கொரோனா ஊரடங்கு முடியும் நாளில் இருந்து, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். 

 • chepauk

  Cricket24, Apr 2020, 10:16 PM

  நினைத்ததை சாதித்துக்காட்டிய அன்புமணி.. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புகையிலை விளம்பரத்திற்கு தடை

  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் கோரிக்கையை ஏற்று, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புகையிலை விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
   

 • Anbumani new plan

  politics21, Apr 2020, 12:03 PM

  கொரோனா பாதித்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு... வேதனையில் தற்கொலைக்கு முயன்ற தாய்... அன்புமணி ஆவேசம்..!

   மக்களைக் காக்க கொரோனாவுடன் போரிட்டு உயிரிழக்கும் மருத்துவர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கு எப்படி மரியாதை செய்கிறோமோ, அதேபோல் இறுதி மரியாதை செய்ய வேண்டும் என பாமக இளஞரணி தலைவரும் எம்.பி.,யுமான அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 
   

 • anbumani amadoss request 60 districts

  politics20, Apr 2020, 8:43 PM

  ஒரு புறம் கைதட்டுவீங்க.. இன்னொருபுறம் எதிர்ப்பீங்களா..? மருத்துவர் உடல் அடக்கம் எதிர்ப்பால் அன்புமணி கோபம்!

  போர்க்காலங்களில் நாட்டைக் காக்க தங்களின் உயிரை பணயம் வைத்து போர் புரிபவர்கள் நமது ராணுவ வீரர்கள்தான். அதேபோல், கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் கிருமியை எதிர்த்து களத்தில் நின்று போராடுபவர்கள் மருத்துவர்கள்தான். அவர்களை நாம் கடவுளாகப் பார்க்க வேண்டும். அவர்களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. நாட்டைக் காக்கும் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களை 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்கிறோம். அதேபோல், மக்களைக் காக்க கொரோனாவுடன் போரிட்டு உயிரிழக்கும் மருத்துவர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கு எப்படி மரியாதை செய்கிறோமோ, அதேபோல் இறுதி மரியாதை செய்ய வேண்டும். 

 • anbuman told no alliance with admk and bjp

  politics20, Apr 2020, 8:03 AM

  மது விலக்கை சாத்தியப்படுத்த சரியான நேரம்..! அரசுக்கு ஐடியா கொடுக்கும் அன்புமணி..!

  கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 25 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கடந்த 2018&ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வுகளில் தமிழகத்தில் 1.50 கோடி பேர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதாகவும், அவர்களில் நான்கில் ஒருவருக்கு அதாவது 37.50 லட்சம் பேருக்கு போதையிலிருந்து விடுதலையாக ஆலோசனைகள் தேவைப்படுவதாகவும் தெரியவந்தது. 

 • anbumani contest rajyasabha MP election

  politics13, Apr 2020, 8:48 PM

  ஊரடங்கிலிருந்து விலக்குக் கொடுக்காதீங்க... தாழியை உடைச்சிடாதீங்க... கறார் குரலில் அன்புமணி!

  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடிக்குமா... குறையத் தொடங்குமா? என்பதை அறிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அடுத்த சில நாட்களில் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தொழிற்சாலைகளின் இயக்கத்தைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோருவது நிலைமையின் தீவிரத்தை உணராமல் எடுக்கப்பட்ட முடிவாகவே தோன்றுகிறது.

 • anbumani

  politics12, Apr 2020, 6:21 PM

  அமெரிக்கா உயிரிழப்பு விகிதமும்.. இந்திய உயிரிழப்பு விகிதமும் ஒன்றாக உள்ளது.. பகீர் கிளப்பும் அன்புமணி..!

  அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால் அமெரிக்காவின் உயிரிழப்பு விகிதமும் (3.85%), இந்திய உயிரிழப்பு விகிதமும் (3.42%) கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது. கனடா, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை விட இந்தியாவின் உயிரிழப்பு விகிதம் மிகவும் அதிகம் ஆகும். இந்திய உயிரிழப்பு விகிதம் பாகிஸ்தானை விட இரண்டரை மடங்காகவும், நார்வேயை விட இரு மடங்காகவும் உள்ளது. சீனாவின் உயிரிழப்பு விகிதத்தை இந்தியா நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 • anbumani

  politics9, Apr 2020, 4:28 PM

  கொரோனாவை கொல்ல என்னோட ஐடியாவை கேளுங்க மோடிஜி... பிரதமருக்கு கடிதம் எழுதிய டாக்டர் அன்புமணி..!

  வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, ஊரடங்கின் போது வாரம் ரூ.1,000 வீதம் நிதியுதவி வழங்க வேண்டும். அத்துடன் அவர்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மாதந்திர அடிப்படையில் மாநில அரசுகளால் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

 • anbumani amadoss request 60 districts

  politics7, Apr 2020, 11:15 AM

  கொரோனா வைரஸ் 3ம் கட்டத்தை எட்டியது.? தொண்டை தண்ணி வற்ற எச்சரிக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்..!

  இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் அதன் இரண்டாம் நிலையான உள்ளூர் பரவல் நிலையில் தான் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தியா கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டத்துக்கும், மூன்றாவது கட்டத்துக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பது இந்தியாவில் நிலைமை மோசமாகி வருவதையே காட்டுகிறது. இதைத் தடுக்க நோய்ப்பரவல் நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டாக வேண்டும்.