மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைந்தால் அதிமுகவை எளிதில் வீழ்த்தி முதல்வராக வந்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்த மு.க.ஸ்டாலினுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைந்தால் அதிமுகவை எளிதில் வீழ்த்தி முதல்வராக வந்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்த மு.க.ஸ்டாலினுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19-ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக தேர்தல் முடிவுகளில் 39 தொகுதிகளில், 37 இடங்களை தி.மு.க., கூட்டணிக்கு அள்ளி வழங்கிய தமிழக மக்கள், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் அப்படி தீர்ப்பை வழங்கவில்லை. அதில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க., முன்னிலை வகிக்கிறது.
மக்களை தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக தெளிவான தீர்ப்பை தமிழக மக்கள் அளித்துள்ளனர். ஆனால் தமிழக அரசுக்கு எதிராக அப்படி ஓட்டளிக்கவில்லை என்பதையே இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படையாக காட்டுகிறது. இதில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டாம் என்பதையே நேரடியாக தமிழக மக்கள் உணர்த்தி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே பாஜகவின் உதவியோடு அதிமுக ஆட்சி நடைபெறுவதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதிமுக எளிதில் வீழ்த்தி முதல்வராகிவிடாமல் என்று கனவு கண்ட ஸ்டாலினுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த முடிவை பார்க்கும் போது திமுக ஆட்சிக்கு வருதை தமிழக மக்கள் விரும்பவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.