காங்கிரஸை கதறவிட்ட பாஜக... மே 26-ம் தேதி மீண்டும் பிரதமர் பதவியேற்கும் மோடி 2.0

By Thiraviaraj RM  |  First Published May 23, 2019, 4:24 PM IST

மே 26-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க பிரதமர் மோடி உரிமை கோருகிறார்.


மே 26-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க பிரதமர் மோடி உரிமை கோருகிறார்.

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

Tap to resize

Latest Videos

இதில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் சூழ்நிலை எழுந்துள்ளது. 

இந்நிலையில் வரும் 26-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மோடி ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்றைய தினமே மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது. 

click me!