நாடு முழுவதும் பாஜக முன்னிலை... தமிழகத்தில் தட்டித்தூக்கும் திமுக...!

By vinoth kumarFirst Published May 23, 2019, 9:14 AM IST
Highlights

நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 23 முன்னிலை வகிக்கிறது.

நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 23 முன்னிலை வகிக்கிறது.

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலை பாரதிய ஜனதா பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியும் சந்தித்தன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. அதைத் தொடர்ந்து  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மாலைக்குள் முடிவுகள் வெளியாகி விடும். இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்கு  ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

முதல் கட்டமாக பாரதிய ஜனதா கட்சி 233 தொகுதிகளிலும், காங்கிரஸ் 98  தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 75 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணி 25 இடங்களிலும், அதிமுக 4 தொகுதிகளிலும் முன்னிவை வகிக்கிறது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும், மதுராவில் ஹேமமாலினியும் முன்னிலை வகிக்கின்றனர்.

click me!