தீபாவளி பண்டிகை : இனிப்பு பிரியர்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைகள்!

First Published Oct 29, 2016, 11:56 PM IST
Highlights


தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுக்கு அடுத்தபடியாக அனைவாின் நாவில் சுவையூட்டுவது இனிப்புகள் தான். அப்படிப்பட்ட இனிப்பு பிரியர்களுக்கு மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். 

வளர்ந்து வரும் நவீன காலத்தில் வீடுகளில் தயார் செய்வதை விட, இனிப்பகங்களில் செய்யப்படும் இனிப்பு வகைகளை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். ஆனால் இதுபோன்ற இனிப்புகளால் இளம் வயதிலேயே பற்சிதைவு, பற்களில் கிருமி தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

இவ்வகை இனிப்புகளை உண்பதை தடுக்க முடியாது என்றாலும், கருப்பட்டி, கற்கண்டு போன்ற இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளில் இருந்து பற்சிதைவு உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இரவு நேரங்களில் இனிப்புகளை சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க கூடாது என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், பல் துலக்கிய பின்பே உறங்க செல்ல வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடி வரும் மக்கள், உடலில் பிரச்சனைகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

click me!