திருட வந்த இடத்தில் பெண்ணுடன் சில்மிஷம்.. வசமாக சிக்கிய கொள்ளையன் !

Published : Jul 24, 2022, 03:01 PM IST
திருட வந்த இடத்தில் பெண்ணுடன் சில்மிஷம்.. வசமாக சிக்கிய கொள்ளையன் !

சுருக்கம்

திருட சென்ற வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு என பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முல்லா என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளோடு 10 வருடங்களாக  சென்னை, தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் வசித்து வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பக்கத்து வீட்டில் வசித்து வரும் மகேஷ்குமார் என்ற இளைஞர் பால்கனி வழியாக சுவர் ஏறி குதித்து முல்லாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். உள்ளே அக்கம் பக்கம் பார்த்த மகேஷ்  டேபிளில் இருந்த மணிபர்சிலிருந்து ரூபாய் ஆயிரத்தை திருடியுள்ளார். பிறகு வேறு ஏதாவது கிடைக்குமா என தேடி பார்த்தார். பிறகு அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் கண்களில் பட்டுள்ளார். திருட வந்த இடத்தில் சபலம் ஏற்பட்டது. உடனே அந்த பெண் அருகில் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..மம்தாவை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகை.. கோடிக்கணக்கில் பணம் - யார் இந்த அர்பிதா முகர்ஜி ?

இதனை அறிந்து அப்பெண் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டார். முல்லா எழுந்து பார்த்த போது மகேஷ் குமார் அங்கிருந்து கீழே குதித்து தப்பி ஓடினார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீவிர விசாரணையில் தேடிய போலீசார், மகேஷ் குமாரை கண்டுபிடித்து, அவரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!