தேனிலவு சென்ற ஜோடி..ரூம் கதவை திறந்த பார்த்த ஊழியர் அதிர்ச்சி - பிணமாக கிடந்த சம்பவம்

By Raghupati R  |  First Published Jul 23, 2022, 11:17 PM IST

பிஜி நாட்டிலுள்ள ட்ரூட்லி என்ற தீவுக்கு தேனிலவுக்காக தம்பதிகள் சண்டை போட்டு கொண்டதில் மனைவி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அமெரிக்காவிலுள்ள டென்னசி மாகாணத்தை சேர்ந்தவர் பிரிட்லி ராபர்ட் டாசன். இவருக்கு வயது 39. இவருக்கும் கிரிஸ்டி சென் என்ற இளம்பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் கடந்த 7ம் தேதி ஃபிஜி நாட்டிலுள்ள ட்ரூட்லி என்ற தீவுக்கு தேனிலவுக்காக சென்றுள்ளனர். அங்கே ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் இருவரும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

அவர்களின் அறைக்கு வெளியே, தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற குறிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மதிய வேளையிலும் சென் மற்றும் டாவ்சன் ஆகியோர் உணவருந்த வெளியே வரவில்லை என்றும் கூறப்படுகிறது.இப்படி அதிக நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகம், வேறு சாவியை கொண்டு அந்த அறையை திறந்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி

அப்போது கிரிஷ்டினா பிணமாக கிடந்ததை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேறு இடத்திற்கு தப்பி சென்ற ராபர்ட்டை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில், ‘ தம்பதி இருவருக்கும் இடையே  திடீரென்று இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துடுப்பு படகு மூலம் தப்பித்தார் என்றும் கூறுகின்றனர். தேனிலவுக்கு வந்த தம்பதி இறந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

click me!