கள்ளக்காதல்.. குக்கரில் கணவனை அடித்துக்கொன்ற மனைவி - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

Published : Jul 23, 2022, 09:26 PM IST
கள்ளக்காதல்.. குக்கரில் கணவனை அடித்துக்கொன்ற மனைவி - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து, குக்கரில் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா பகுதியை சேர்ந்தவர் முதுகு முரளி. இவருக்கும் மிருதுளா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முரளிக்கு வெளிநாட்டில் பேராசிரியர் வேலையை கிடைத்தது. எனவே அவர் தனது மனைவி மற்றும் மகனை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.

அச்சமயத்தில் மிருதுளாவுக்கு அந்த பகுதியில் இருக்கும் சங்கர் என்ற 18 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நட்பிலிருந்து, கள்ள உறவாக மாறியுள்ளது. இருவரும் யாருமில்லாத சமயத்தில் தனிமையில் சந்தித்து இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு முரளி வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி

நீண்ட மாதங்களுக்கு பிறகு கணவன் வருவதை அறிந்த மனைவி அதிர்ச்சியில் இருந்தார். காரணம் இந்த சங்கருடன் இருந்த கள்ள உறவுதான். வீட்டிற்கு வந்த கணவர் முரளியிடம் அவர் சரிவர பேசவில்லை. முரளி மனைவி மிருதுளாவிடம் நெருங்கி போய் பேசினாலும் கூட, மிருதுளா முரளியிடம் நெருக்கம் காட்டவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த முரளி தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய முரளி, தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அந்த சமயத்தில் மிருதுளா அவரது காதலனை அழைத்து தனது கணவர் இங்கு இருக்கும் வரை சந்திக்க இயலாது என்று கூறியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த காதலன் சங்கர், முரளியை கொலை செய்துவிடலாம் என்ற யோசனையை மிருதுளாவிடம் கூறியுள்ளார். சிறிது நேரம் யோசித்து மிருதுளாவும் சரி என்று சொல்ல இருவரும் திட்டம் தீட்டினர்.

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

சம்பவம் நடந்த அன்று,  இரவு முரளி தூங்கி கொண்டிருந்த சமயத்தில் அவரது தலையில் குக்கரை கொண்டு அடித்து கொலை செய்துள்ளார் மிருதுளா. பிறகு கள்ள காதலன் சங்கரை அழைத்துள்ளார்  மிருதுளா. இருவரும் சேர்ந்து முரளியின் சடலத்தை யாரும் பார்க்காத இடத்தில் தூக்கி போட்டுள்ளனர்.  இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து முரளியை தூக்கி போட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, முரளியின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. 

இதையடுத்து அவர்கள் அந்த உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதனிடையே முரளியின் தாய், தனது மகனை வீட்டிற்கு வந்து தேடியுள்ளார். அங்கு அவர் காணமல் போனதாக மனைவி கூற, தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மிருதுளாவை துருவி துறவி விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து காவல் அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மம்தாவை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகை.. கோடிக்கணக்கில் பணம் - யார் இந்த அர்பிதா முகர்ஜி ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!