10 வயது சிறுமிக்கு மது ஊத்திக்கொடுத்த இளைஞர்கள்.. வைரல் வீடியோ - 6 பேர் அதிரடி கைது !

By Raghupati R  |  First Published Jul 23, 2022, 6:48 PM IST

10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே உள்ள கிராமத்தை ஒரு சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் மது குடிப்பது போலவும், பீடி பற்ற வைத்து புகைப்பது போலவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவியது. இந்த வீடியோ சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி

இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு வாலிபர்கள் சிலர் மதுவை டம்ளரில் ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க பற்ற வைத்து கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். பிறகு போலீசார் சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி பற்ற வைத்து கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !

அவர்கள் பின்வருமாறு, சங்கையா ( 22), குமார் (21), ரமேஷ் (22), சிவராஜ் (27), ருத்ரப்பா (26), அழகப்பன் (26) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிவருத்ரப்பா, மல்லேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி குடிக்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

click me!