மதுபோதையில் விளைவித்த விபரீதம்...பழிக்கு பழிவாங்கிய 6 பேர் கைது

Published : Jul 23, 2022, 04:35 PM IST
மதுபோதையில் விளைவித்த விபரீதம்...பழிக்கு பழிவாங்கிய 6 பேர் கைது

சுருக்கம்

போதை அதிகமானதும் சரவணனை  பீர்பாட்டினால் மண்டையில் ஓங்கி அடித்தும், தலையில் கல்லை போட்டும் ரகு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

 போதையால்ஏற்படும் விபரீதங்கள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில்சமீபத்தில் சென்னையில் நடந்த கொலை பரப்பை உண்டாக்கி வருகிறது. சென்னை எண்ணூர்  சிவகாமி நகர் ஆறாவது தெருவை சேர்ந்த  சரவணன்(44) பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் அப்பகுதிகள் ரவுடி போல சுற்றித்திரிந்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி பிராட்வேயில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
[
 அப்பகுதியில் உள்ளவர்களிடம் அடிக்கடி சரவணன் தகராறில் ஈடுபடுவார் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் அதே பகுதியை சேர்ந்த ரகு( 28 )என்பவருக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சரவணன் தன்னை திட்டியது குறித்து ஆத்திரத்தில்  புவனேஸ்வரிடம் ரகு உன் கணவரை கொன்று விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை புவனேஸ்வரி தன் கணவரிடம் கூறவே,  இருவருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

சரவணன் ரகுவை தாக்கியதடித்து மன உளைச்சலில் இருந்த ரகு நேற்று சரவணன் வீட்டிற்கு சென்று இருவரும் சமாதானம் ஆகிவிடலாம் என கூறி மது அருந்த தனது பைக்கில் சரவணனை அழைத்து சென்றுள்ளார்.  வழியில் ரகுவின் நண்பர்களான அரவிந்த், சதீஷ்குமார், கோபி, பாலகிருஷ்ணன், அஜய் என்கிற நிர்மல் ஆகியோர் மதுவுடன் காத்திருந்துள்ளனர்.

பின்னர் எண்ணூர் கத்திவாக்கம்  மேம்பாலத்திற்கு கீழ் உள்ள மைதானத்தில் அனைவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். சரவணனுக்கு மது போதை அதிகமானதும் அவரை பீர்பாட்டினால் மண்டையில் ஓங்கி அடித்தும், தலையில் கல்லை போட்டும்  ரகு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். 
இந்த சம்பவம் குறித்து அறிந்த எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகு உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளனர் விசாரணையில் ரகுவை மிரட்டி அடிக்கடி சரவணன் மது வாங்கி குடிப்பாராம் இந்த ஆத்திரத்தில் தான் சரவணனை மைதானத்தில் வைத்து அடித்துக் கொண்றதாக ரகுவும் அவரது கூட்டாளிகளும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்