ஹைதராபாத்திலிருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்ட நுரையீரல்!! மூன்றே நிமிடத்தின் நடந்த செம்ம திக் திக் திரில்லிங்க் சம்பவம்!!

By sathish kFirst Published Feb 7, 2019, 9:05 PM IST
Highlights

ஹைதராபாத்தில் மூளை சாவு அடைந்த சிறுமியின் நுரையீரல் விமானம் மூலம் கோயம்புத்தூர் கொண்டுவரப்பட்டதை அடுத்து வெறும் மூன்றே நிமிடத்தில் கோவை விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிநயா என்ற 14 வயது சிறுமி மூளையில் ரத்தகசிவு காரணமாக யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை  மூளைச்சாவு அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் இறந்த சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் நுரையீரல் கோவை அவிநாசி ரோட்டில் இருக்கும் PSG மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மும்பையைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு தேவைப்பட்டது. இதனால் இதயம் அந்த பெண்ணுக்கு தானமாக கொடுக்கப்பட்டது. 

இதனையடுத்து, இன்று மதியம் 2 மணியளவில் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சிறுமியின் நுரையீரல் பாதுகாப்பாக PSG மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பாக எடுத்து செல்லபட்டது. இதற்காக சிறப்பு ஏற்ப்பாடாக விமான நிலையத்திலிருந்து மருத்துவமனை வரை  சாலையில் உள்ள அனைத்து சிக்னல்களும் ஒரே நேரத்தில் காவல்துறையினர் உதவியுடன் கட்டுப்படுத்தப்பட்டது. 

இதனையடுத்து, விமான நிலையத்திலிருந்து சென்ற ஆம்புலன்ஸ் வெறும் 3நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் வருவது போல திக் திக் நிமிடங்களாக செம்ம திரில்லாக  இந்த சம்பவமும் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் சமூக வலைத்தளங்களின் வழியாக பாராட்டி வருகின்றனர்.

click me!