பலரின் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்து வந்த ஷாஃப்ரூன் நிஷாவிடம், இளையராஜாவின் மகனை இப்படி மதம் மாற்றிவிட்டீர்களே? என்று கேட்ட கேள்வி சற்று கோபத்தை தூண்டிவிட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான புகழ் பெற்றவர் இளையராஜா தனது இந்து மதத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். அவருடைய இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் 2015ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆடை வடிவமைப்பாளரான ஷாஃப்ரூன் நிஷா சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல?
ரம்ஜானை முன்னிட்டு ஷாஃப்ரூன் நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது பலரும் நிஷாவிடம் தொடர்ந்து, யுவனை ஏன் மத மாற்றம் செய்தீர்கள்?, நீங்கள் இந்து மதத்திற்கு மாறியிருக்கலாமே?, இளையராஜாவின் மகனை மதமாற்றிவிட்டீர்களே? என ஒரே மாதிரியான கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டுள்ளனர். ரசிகர்களின் கேள்விக்கு எவ்வித பதற்றமும் இன்றி பொறுமையாக பதிலளித்துள்ளார் ஷாஃப்ரூன் நிஷா.
இதையும் படிங்க: பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...!
யுவன் 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்லாமை பின்பற்ற ஆரம்பித்திருந்தார். அதன் பிறகே அவருக்கும் எனக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அவரது மிகப்பெரிய கேள்விகளுக்கான பதில்கள் குரானில் கிடைத்திருக்கலாம். அதனால் அவருக்கு இஸ்லாம் மதத்தை பிடித்திருக்கலாம். எங்களுடைய திருமணம் எனது குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. மதத்தை தாண்டி எங்களுடைய எண்ண அலைவரிசை ஒரே மாதிரி இருந்தது, ஆரோக்கியமான உரையாடல் மூலமாக ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம் என்று பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!
பலரின் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்து வந்த ஷாஃப்ரூன் நிஷாவிடம், இளையராஜாவின் மகனை இப்படி மதம் மாற்றிவிட்டீர்களே? என்று கேட்ட கேள்வி சற்று கோபத்தை தூண்டிவிட்டது. மறுபடியும் உங்கள் முட்டாள் தனத்தை காட்டுகிறது. உங்களுக்கு நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எப்படி மக்கள் இவ்வளவு முட்டாள் தனமாக இருக்க முடியும் என்பது அதிர்ச்சியாக உள்ளது. யார் வேண்டுமானாலும் வெகுளியான மனதில் எளிதில் விஷம் கலக்க முடியும். எப்படியோ யுவனின் மனதில் விஷத்தை கலந்துவிட்டீர்கள் என்று சற்று கடுப்பாக பதிலளித்துள்ளார்.