மைக்கை ஆஃப் பண்ணிவிட்டு வெளிய வா... காமெடி நடிகர் யோகிபாபுவின் கறார் பேச்சுக்கு வழுக்கும் எதிர்ப்பு

Published : Jul 29, 2024, 03:56 PM IST
மைக்கை ஆஃப் பண்ணிவிட்டு வெளிய வா... காமெடி நடிகர் யோகிபாபுவின் கறார் பேச்சுக்கு வழுக்கும் எதிர்ப்பு

சுருக்கம்

போட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு கறாராக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது.

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் சிம்புதேவன். இதையடுத்து விஜய்யை வைத்து அவர் இயக்கிய புலி திரைப்படம் பிளாப் ஆனதை தொடர்ந்து அவர் பெரியளவில் ஹிட் படங்களை கொடுக்கவில்லை. இந்த நிலையில், முதன்முறையாக யோகிபாபு உடன் கூட்டணி அமைத்துள்ள சிம்புதேவன், அவரை வைத்து போட் என்கிற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி திரைக்கு வர உள்ளது. 

போட் படத்தில் போட் மேனாக நடித்துள்ளார் யோகிபாபு. இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னர் நடக்கும் கதை இது. இப்படம் முழுக்க முழுக்க கடலில் தான் படமாக்கப்பட்டு உள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். போட் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. போட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. 

இதையும் படியுங்கள்... ஹீரோவா பல கெட்டப்பில் நடிச்சாலும்... கமல் வில்லன் யாஷ்கினா மாற என்ன பாடு படுறாரு பாருங்க! வைரலாகும் புகைப்படம்

இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி வெகுநேரம் ஆகியும் படத்தின் நாயகன் யோகிபாபு கலந்துகொள்ளவில்லை. இறுதியாக நிகழ்ச்சி நிறைவுபெறும் சமயத்தில் அங்கு வந்த யோகிபாபு, நேராக மேடையேறி வந்து அனைவரிடமும் தாமதத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். படப்பிடிப்பு ஒன்றை முடித்துவிட்டு வரும் வழியில் டிராபிக்கில் சிக்கிக் கொண்டதால் லேட் ஆகிவிட்டதாகவும் கூறினார். 

யோகிபாபு லேட் ஆனதற்கான விளக்கம் கொடுத்த பின்னரும் அவர் தாமதமாக வந்தது பற்றியே செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் டென்ஷன் ஆன யோகிபாபு, ‘மைக்கை ஆஃப் பண்ணிவிட்டு வெளிய வா சொல்றேன்’ என அந்த பத்திரிகையாளரை பார்த்து சொடக்கு போட்டு சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  ராயன் படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க... ஆகஸ்ட் 2ந் தேதி ரிலீஸ் ஆகும் 7 தமிழ் படங்கள் - முழு லிஸ்ட்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?