Briyani Man : யூடியூப் நேரலையில் பிரியாணிமேன் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வரும் அபிஷேக் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒருவர் பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டால் ஒன்று அவர் சினிமாவில் இருக்க வேண்டும், இல்லையெறால் அரசியலில் இருக்க வேண்டும். ஆனால் யூடியூப் வந்த பின்னர் கையில் ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் செலிபிரிட்டி ஆகலாம் என்கிற நிலை வந்துவிட்டது. அப்படி யூடியூப், பிரபலமாகத் துடிக்கும் பலருக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு அவர்களின் கனவை நனவாக்கி இருக்கிறது.
பிரியாணி சமைப்பதில் தொடங்கி, பிரசவம் பார்ப்பது வரை இன்றைய யூடியூப்பர்கள் உருவாக்காத கண்டெண்டே இல்லை என சொல்லும் அளவுக்கு, சற்று எல்லைமீறி சென்று கொண்டிருக்கிறது டிஜிட்டல் உலகம். இதில் மோதலுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் சமீபத்தில் யூடியூப்பர்களான இர்பான் மற்றும் பிரியாணி மேன் இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவரும் மாற்றி மாற்றி வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்து வந்தனர்.
இதையும் படியுங்கள்... Dhanush : ஆடி கிருத்திகை... மகன்களோடு திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ்
கடந்த ஆண்டு யூடியூப்பர் இர்பானின் கார் மோதி மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த காரை ஓட்டி வந்தது இர்பானின் மச்சான் தான் என்பதால்இந்த வழக்கில் இர்பான் கைது செய்யப்படவில்லை. சிலர் இர்பான் தான் காரை ஓட்டி வந்ததாக கூறி அதுவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், பிரியாணிமேன் அபிஷேக் அண்மையில், இந்த விபத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கு இர்பானும் பதிலடி கொடுத்தார்.
இவர்கள் இருவருக்குமான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், தற்போது பிரியாணி மேன் அபிஷேக், யூடியூப் நேரலையில் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனது தற்கொலைக்கு ஜேசன் என்பவர் தான் காரணம் என்று கூறிவிட்டு துப்பட்டாவை மாட்டி தற்கொலை செய்துகொள்ள அபிஷேக் முயல்கிறார். இந்த வீடியோவை நேரலையில் பார்த்த அவரது நண்பர்கள் பதறியடித்து அபிஷேக்கின் அம்மாவுக்கு போன் போட்டு விஷயத்தை கூறி இருக்கிறார்கள்.
WTF trying commit suicide on live
Her mother saved him 🤯🫨
I personally feel DMK giving pressure to shut him down.
What’s your take on this ??? pic.twitter.com/uchvGmmN9v
இதனால் பதறிப்போன அபிஷேக்கின் தாய் கதவை தட்டி, அவரின் தற்கொலை முயற்சியை தடுத்திருக்கிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. பிரியாணிமேன் தன் தற்கொலைக்கு காரணம் ஜேசன் என்பவர் தான் என கூறிய நிலையில், அந்த ஜேசன் திமுக-வை சேர்ந்தவர் எனக்கூறி ஒரு சிலர் கிளப்பிவிட்டுள்ளனர். இதனால் திமுகவினரை நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Raayan : 100 கோடியை நெருங்கும் வசூல்... பாக்ஸ் ஆபிஸில் ரவுசு காட்டும் ராயன் - 3 நாள் கலெக்ஷன் நிலவரம் இதோ