Dhanush : ஆடி கிருத்திகை... மகன்களோடு திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ்
ஆடி கிருத்திகை தினமான இன்று நடிகர் தனுஷ் தன்னுடைய மகன்களுடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Dhanush
தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்து வருபவர் தனுஷ். அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த அவரின் 50வது திரைப்படமான ராயன் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி இயக்கியும் உள்ளார் தனுஷ். ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
Dhanush temple visit
ராயன் திரைப்படத்தில் தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வரும் ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. ராயன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் தனுஷ், கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... போயஸ் கார்டனில் கூடிய ரசிகர்கள்.. Selfie எடுத்து மகிழ்ந்த தனுஷ் - வைரல் வீடியோ!
Dhanush visit Tiruvannamalai
அந்த வகையில் ஆடி கிருத்திகை தினமான இன்று நடிகர் தனுஷ், திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். கையில் ருத்ராட்ச மாலையை சுற்றிக்கொண்டு, கடவுள் பக்தியோடு தனுஷ் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனுஷுடன் அவரது மகன்களும் வந்திருந்தனர். சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்ட பிரசாதமும் தனுஷுக்கு வழங்கப்பட்டது.
Dhanush visit Tiruvannamalai temple
தனுஷ் திருவண்ணாமலைக்கு வந்திருந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அவரை காண கோவிலில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி நடிகர் தனுஷை பத்திரமாக கோவிலுக்குள் அழைத்து சென்றனர். கோவிலில் தனுஷுடன் ரசிகர்கள் சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தனுஷ் திருவண்ணாமலை கோவிலுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அன்று சுமார் மூஞ்சி குமாரு... இன்று அடுத்த சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் தனுஷின் Net Worth இதோ