- Home
- Gallery
- Raayan : 100 கோடியை நெருங்கும் வசூல்... பாக்ஸ் ஆபிஸில் ரவுசு காட்டும் ராயன் - 3 நாள் கலெக்ஷன் நிலவரம் இதோ
Raayan : 100 கோடியை நெருங்கும் வசூல்... பாக்ஸ் ஆபிஸில் ரவுசு காட்டும் ராயன் - 3 நாள் கலெக்ஷன் நிலவரம் இதோ
தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள ராயன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

raayan
நடிகர் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ராயன். தனுஷின் 50வது படமான இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஒரு ஏரியாவையே செட் போட்டு படமாக்கி உள்ளார் தனுஷ். சுமார் 30 கோடி செலவில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ராயன் திரைப்படத்தை தனுஷ் தான் இயக்கி இருக்கிறார். இது அவர் இயக்கிய இரண்டாவது படமாகும்.
Dhanush
ராயன் படத்தில் தனுஷின் சகோதரர்களாக காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷானும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்துள்ளனர். மேலும் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இதை எடுத்துள்ளார் தனுஷ். இப்படத்திற்காக நடிகர் தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Dhanush : ஆடி கிருத்திகை... மகன்களோடு திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ்
Raayan Dhanush
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் இரு தினங்களிலேயே ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ராயன் திரைப்படம் மூன்றாம் நாளான நேற்றும் அதன் வசூல் வேட்டையை தொடர்ந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான திரையரங்குகளில் ராயன் திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வசூலை வாரிக்குவித்துள்ளது.
Raayan Box Office collection
மூன்று நாட்கள் முடிவில் ராயன் திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.40 கோடி வசூலித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெலுங்கில் ராயன் படம் ரூ.7.5 கோடியும், இதர இந்தியாவில் ரூ.10 கோடியும் வசூலித்திருக்கிறது. வெளிநாடுகளில் மட்டும் ராயன் படம் ரூ.20 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷின் கெரியரில் அதிவேகமாக ரூ.75 கோடி வசூலை கடந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பென்ட் ஹவுஸ் முதல் ரியல் எஸ்டேட் வரை.. அப்பாவுக்கே சவால் விடும் துல்கர் சல்மான்.. சொத்து மதிப்பு எவ்வளவு?