- Home
- Gallery
- ராயன் படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க... ஆகஸ்ட் 2ந் தேதி ரிலீஸ் ஆகும் 7 தமிழ் படங்கள் - முழு லிஸ்ட்
ராயன் படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க... ஆகஸ்ட் 2ந் தேதி ரிலீஸ் ஆகும் 7 தமிழ் படங்கள் - முழு லிஸ்ட்
ராயன் படத்திற்கு போட்டியாக வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

மழை பிடிக்காத மனிதன்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்கி உள்ளார். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
போட்
யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் போட். இப்படத்தை சிம்புதேவன் இயக்கி உள்ளார். கெளரி கிஷான், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க கடலில் தான் படமாக்கப்பட்டு உள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படமும் ஆகஸ்ட் 2ந் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... என்ன பாடு படுத்தப்போறாங்களோ.. இந்தியில் ரீமேக் ஆகும் மகாராஜா; விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்?
நண்பன் ஒருவன் வந்த பிறகு
புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இப்படத்தில் யூடியூபர் இர்பான், பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு காஷிப் இசையமைத்து உள்ளார். இப்படமும் ஆகஸ்ட் 2ந் தேதி திரைக்கு வர உள்ளது. வெங்கட் பிரபு தான் இப்படத்தை வெளியிடுகிறார்.
வாஸ்கோடகாமா
நகுல் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வாஸ்கோடகாமா. இப்படத்தை ஆர்.ஜி.கே இயக்கி உள்ளார். அருண் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சதீஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை தமிழ் குமரன் மேற்கொண்டுள்ளார். இப்படமும் ஆகஸ்ட் 2-ந் தேதி திரை காண உள்ளது.
சிறு பட்ஜெட் படங்கள்
பால சரவணன் ஹீரோவாக நடித்துள்ள பேச்சி திரைப்படம், தெருக்கூத்து கலையை மையமாக வைத்து உருவாகி உள்ள ஜமா, மன்சூர் அலிகானின் மகன் ஹீரோவாக நடித்துள்ள கடம்பான்பாறை ஆகிய திரைப்படங்களும் வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த புது வரவுகளால் தனுஷின் ராயன் பட வசூலுக்கு சிக்கல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... கமலை உதாசின படுத்திய ஸ்ரீவித்யா.! இருவருக்கும் நடந்த பிரச்சனை இதுதான்? திடீர் முடிவால் திசைமாறிய வாழ்க்கை!