பிரபல இயக்குனர் அமீர், கடைதிறப்பு விழாவில் கலந்து கொண்டபோது, தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தன்னை அழைத்தால் அவரது கட்சியில் சேர தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். நடிகர் சூர்யா - த்ரிஷா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீர், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை ஹீரோவாக வைத்து இயக்கிய 'பருத்தி வீரன்' திரைப்படம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாக உள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகை பிரியா மணி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றதோடு மட்டும் இன்றி, சிறந்த இயக்குனருக்கான பல விருதுகளை அமீர் இப்படத்திற்காக வென்றார்.
அமீர் கடைசியாக நடிகர் ஜெயம் ரவி, இரட்டை வேடத்தில் நடித்த ஆதி பகவான் படத்தை இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து, ஒரு நடிகராக மாறி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக வடசென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில்பேசப்பட்டது. மேலும் சமீபத்தில் வெளியான உயிர் தமிழுக்கு என்கிற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் அமீர்.
undefined
சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாத பிரபலமாக இருக்கும் அமீர், போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இதற்காக இவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். கடந்த வாரம், ஜாபர் சாதிக் மனைவி, ஆமீனா வங்கி கணக்கில் இருந்து அமீர் வங்கி கணக்கிற்கு ரூ 1 கோடி மாற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இது முழுக்க முழுக்க வதந்தி என கூறி, இயக்குனர் அமீர் அறிக்கை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் அமீர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமீரிடம் செய்தியாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வியை முன்வைத்தபோது... "நிச்சயமாக வருவேன் இன்று இருக்கும் அரசியல் நெருக்கடியின் காரணமாக அரசியலுக்கும் வந்தாலும் வருவேன் என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் எல்லோரும் அரசியலில் தான் உள்ளோம். திராவிடம் என்கிற உணர்வு நமது ரத்தத்திலேயே யுள்ளது. யாரெல்லாம் பாசிசத்திற்கும் ஆரியத்திற்கும் எதிரான கொள்கை கொண்டு செயல்படுகிறார்களே அவர்கள் அனைவரும் திராவிட அரசியல் செய்பவர்கள் தான். எனவே திராவிடம் என்கிற பெயரை தாங்கிய கட்சி தான் அதனை செய்கிறார்கள் என்று அல்ல. பாசிசத்திற்கும் ஆரியத்துக்கும் எதிரானது தான் திராவிடம், அது தான் திராவிடத்தின் அடையாளம் என்கிறார்.
"நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு" மாஸ் படங்களுடன் கம் பேக் கொடுக்கும் SAM!
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக தான் உள்ளது என்றும், தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தன்னை அழைத்தால், அவரது கட்சியில் சேர தயாராக உள்ளேன் விஜய் சீமான் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என்றார். மேலும் மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தை நிராகரித்திருப்பது குறித்த கேள்விக்கு, இதுதான் ஒன்றிய அரசின் முகம்! நிராகரித்திருப்பது என்பது கூட பெரிதல்ல ஆனால் அதற்கும் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள் என்பதை என்னும் போது தான் வருத்தமாக உள்ளது என்றார்.