Pushpa 2 : "ராஷ்மிகா.. அல்லு மீது Case போடுவேன்.. கடுப்பான ரசிகர்.. ஏன்? கோவமா இருந்தாலும் ஒரு ஞாயம் வேண்டாமா?

Ansgar R |  
Published : Jun 20, 2024, 05:29 PM IST
Pushpa 2 : "ராஷ்மிகா.. அல்லு மீது Case போடுவேன்.. கடுப்பான ரசிகர்.. ஏன்? கோவமா இருந்தாலும் ஒரு ஞாயம் வேண்டாமா?

சுருக்கம்

Pushpa 2 : தெலுங்கு திரை உலகை பொறுத்தவரை முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தான் புஷ்பா.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அல்லு அர்ஜுன், இவருடைய நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு, இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் நடிகைகள் பாஹத் பாசில், ராஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பலரும் கனகச்சிதமாக நடித்திருந்தனர். 

உலக அளவில் சுமார் 370 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்திருந்த நிலையில், இப்போது மூன்று ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் (Pushpa 2) இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. 

Ego கிடையாது.. இறுதி வரை அன்னதான பிரபு.. கர்ணனாய் வாழ்ந்த "கேப்டன்" - பலரும் கண்டிராத அவரின் Rare Pics!

அது அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. ஆனால் படத்தில் இன்னும் சில கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கும் பணிகள் பாக்கியுள்ளதால், குறித்த நேரத்தில் படம் வெளியாவது சந்தேகம் என்று சில தகவல்கள் வெளியானது. அதன் பிறகு ஆகஸ்ட் மாதத்திற்கு பதிலாக டிசம்பர் மாதம் இந்த திரைப்படம் நிச்சயம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல்களும் வந்தது. 

இந்த சூழலில் அல்லு அர்ஜுனின் ரசிகர் ஒருவர், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தன் பதிவில், "ஜூன் மாதம் வெளியாக வேண்டிய திரைப்படம், தற்பொழுது டிசம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏன் இந்த மாற்றம்? படக்குழுவினர்களுக்கு ரசிகர்களின் உணர்வுகள் விளையாட்டாக தெரிகிறதா?". "குறித்த நேரத்தில் படத்தை வெளியிடவில்லை என்றால் புஷ்பா கம்யூனிட்டி சார்பாக பட குழுவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்" என்று அவர் கூறியிருக்கிறார். 

ஒரு திரைப்படம் தாமதிக்க எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றது என்பதை ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வேறு பெரிய படங்கள் ஒரே நேரத்தில் மோதினால் வசூல் ரீதியாகவும் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படும். அது மட்டுமல்லாமல் படம் எடுத்து முடித்த பிறகு அதை திரைக்கு கொண்டுவர பல பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த பணிகளுக்கு சில சமயங்களில் யூகித்ததை விட கூடுதலான நேரம் தேவைப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 

ஆகவே ரசிகர்கள் பொறுமையோடு இருந்து தாங்கள் ரசிக்கும் நாயகர்கள் மற்றும் நாயகிகளின் படங்களை ரசிக்க வேண்டும் என்று திரைப்பட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ரஜினி, மம்முட்டி முதல் துல்கர் வரை.. பிரபல உச்ச நடிகர்களின் அரிய Unseen வெட்டிங் போட்டோஸ் இதோ..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்