நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பற்றியும், தற்போதைய அவரது உடல்நிலை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பற்றியும், தற்போதைய அவரது உடல்நிலை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: கையில் ஆயுதம் ஏந்திய போர் வீரனாய் ஜெயம் ரவி..! 'பொன்னியின் செல்வன்-1' அருண்மொழி வர்மன் லுக் வெளியானது!
56 வயதாகும் நடிகர் விக்ரம் இன்று தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த போது, திடீர் என மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, உடனடியாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க துவங்கினர். அதன் படி தற்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், இன்னும் இரு தினங்களில் விக்ரம் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: எந்த நடிகைக்கு வரும் இப்படி ஒரு துணிச்சல்? ஆண்ரியாவின் முயற்சியை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரல் வீடியோ.
ரசிகர்களால் சியான் விக்ரம் என்று அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் கென்னடி ஜான் விக்டர் (கென்னி) என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள இவர், தான் நடிக்கும் படத்திற்காக ரிஸ்க் எடுக்க என்றுமே தயங்கியது இல்லை. இதுவரை தேசிய விருது, ஏழு பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் 2004 இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
மேலும் செய்திகள்: கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?
இவர் நடித்த கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன்: முதல் பாகம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.