Actor Vikram hospitalised : உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி!

Published : Jul 08, 2022, 02:18 PM ISTUpdated : Jul 08, 2022, 02:57 PM IST
Actor Vikram hospitalised : உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி!

சுருக்கம்

 Actor Vikram admitted in  hospital : காவேரி மருத்துவமனையில் சீயான் சிகிச்சை பெற்று வருவதா தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்பாக  இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உறுதியான தகவல் இல்லை.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நடிகர் விக்ரம் தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காவேரி மருத்துவமனையில் சீயான் சிகிச்சை பெற்று வருவதா தகவல் வெளியாகியுள்ளது. 56 வயதான நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பாக  இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

முன்னதாக கடந்த டிசம்பரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டநாயகன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவித்திருந்தார். பின்னர் குணமடைந்த விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்து வருகிறார். இவர் குறித்தான போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கம்பீரமான தோற்றத்தில் நடித்துள்ள விக்ரமுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..Ponniyin Selvan Teaser : இன்று வெளியாகும் பொன்னியின் செல்வன் டீசர்.. யார் ரிலீஸ் செய்வது தெரியுமா?

மேலும் செய்திகளுக்கு..ஸ்மைலிங் குயின் சாய்பல்லவி..கன்னம் சிவக்க..விதவிதமான போஸ்!

இதற்கிடையே கோப்ரா  படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தை ஆர். அஜய் ஞானமுத்து எழுதி இயக்குகிறார். இதில் விக்ரமுடன்,  கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி , இர்பான் பதான் , மியா ஜார்ஜ் , ரோஷன் மேத்யூ , சர்ஜனோ காலித் , பத்மப்ரியா , முகமது அலி பெய்க் , கனிஹா , மிர்னாலினி ரவி , மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..கையில் ஆயுதம் ஏந்திய போர் வீரனாய் ஜெயம் ரவி..! 'பொன்னியின் செல்வன்-1' அருண்மொழி வர்மன் லுக் வெளியானது!

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடைசியாக மகன் துரு விக்ரம் அறிமுகமான ஆதித்ய வர்மா, மஹான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் விக்ரம். இந்நிலையில் விக்ரம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அவரது ரசிகர்களும், பிரபலங்களும் சீயான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!