
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்களை பெற்ற விஜே சித்ரா, நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இரவு முழுவதும் செம்ம ஹேப்பியாக இருந்த சித்ரா... அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டது ஏன்?
இதையடுத்து சித்ராவுடன் ஓட்டல் அறையில் தங்கியிருந்த ஹேமந்த் ரவியிடம் நேற்று முதலே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது சித்ராவிற்கு அவருக்கு நிச்சயிக்கப்பட்ட தொழிலதிபர் ஹேமந்த் ரவிக்கும் அக்டோபர் மாதமே பதிவு திருமணம் நடந்துவிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்று போலீசார் ஹேமந்த் ரவியை விசாரிக்க முடிவெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹேமந்த் உடனான திருமணத்தை நிறுத்த நினைத்தாரா சித்ரா?... அடுத்தடுத்து அதிர்ச்சியை அதிகரிக்கும் தகவல்கள்...!
ஏற்கனவே சித்ராவிற்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஆர்.டி.ஓ மற்றும் போலீசார் முன்னிலை விஜே சித்ராவின் உடற்கூராய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரண்டாவது நாளாக ஹேமந்த் ரவியை விசாரணைக்கு ஆஜராகும் படி நசரத்பேட்டை போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுடன் நடித்த சக நடிகர், நடிகைகள் மட்டும் சின்னத்திரை வட்டாரத்தில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.