
கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சுதாகொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இதில் கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர். ச்சே... மனுஷன் என்னமா உருக வச்சியிருக்காருய்யா? என ரசிகர்களில் ஆரம்பித்து சக நடிகர்கள் வரை கண் கலங்க வைத்திருக்கும் படமாக அமைத்திருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.
தீபாவளி விருந்தாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 12ம் தேதி வெளியான சூரரைப் போற்று திரைப்படம் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலேயே இல்லாத அளவிற்கு இதுவரை 110 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதுவரை அமேசான் பிரைமில் அதிக பார்வையாளர்கள் பார்த்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் 2020ம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பட ஹேஷ்டேகுகளில் #SooraraiPottru இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்தது. இதை சூர்யா ரசிகர்கள் #SURIYARuledTwitter2020 என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் கொண்டாடி தீர்த்தனர். தற்போது மற்றொரு சாதனையாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட இரண்டாவது திரைப்படம் என்ற பெருமையையும் சூரரைப் போற்று படைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.