
பல்வேறு மர்மங்கள் நீடிக்கும் இவரது மரணம் குறித்து போலீசார் தற்போது பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். அதே போல், இவரது வருங்கால கணவர் ஹேமந்த்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், சித்ராவிற்கும், தனக்கும் கடந்த அக்டோபர் மாதம், 19 ஆம் தேதி திருமணம் நடந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து, ஆர்.டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, போரூர் கோட்டாட்சியர் லாவண்யா தலைமையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு பின்பே, சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும்.
இந்நிலையில் சித்ராவிற்கு நெருக்கமான பல பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் ஷாலு ஷம்மு, உன்னுடைய வாழ்க்கை துணை விஷயத்தில் நீ எடுத்த முடிவு தவறாகிவிட்டது என்று கூறி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "உன்னை இப்படி இழந்துவிடுவேன் என தெரியாது பேபி. கடைசியாக நான் உன்னிடம் போன் பேசிய போது கூட நீ ஒரு தவறான வாழ்க்கை துணையை தேர்வு செய்து விட கூடாது என்பதற்காக கெஞ்சினேன். ஆனால் நீ என் பேச்சை கேட்கவில்லை. இப்படி ஒரு முடிவை நீ எடுப்பாய் என தெரிந்திருந்தால் உன்னை கெஞ்சுவதை விட்டிருக்கமாட்டேன் என மனவேதனையோடு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.