‘பத்தல பத்தல’னு அனிருத் போட்ட தர லோக்கல் சாங்... 67 வயதிலும் அசராமல் குத்தாட்டம் போட்ட கமல் - விக்ரம் அப்டேட்

By Asianet Tamil cinema  |  First Published May 11, 2022, 1:32 PM IST

Pathala Pathala song : விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா வருகிற மே 15-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 


மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் விக்ரம். கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

அனிருத் இசை, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு என மிகப்பெரிய டெக்னிக்கல் டீம் பணியாற்றியுள்ள இப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக் உள்ளது. இப்படம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 20 நாட்களே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

Tap to resize

Latest Videos

அந்த வகையில், தற்போது விக்ரம் படத்தின் முதல் பாடல் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி பத்தல பத்தல என பெயரிடப்பட்டுள்ள அப்பாடலை நடிகர் கமல்ஹாசனே எழுதி, பாடி உள்ளார். அப்பாடல் இன்று வெளியிடப்பட உள்ளது. இதற்காக கமல் குத்தாட்டம் போடும்போது எடுத்த புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, இன்று மாலை 7 மணிக்கு பத்தல பத்தல பாடல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா வருகிற மே 15-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விக்ரம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இதையும் படியுங்கள்... பணக்கஷ்டத்தால் அவதி... மீண்டும் நடிக்க வந்த கமலின் முன்னாள் மனைவி- மகள்கள் ஹீரோயினாக இருந்தும் இந்த நிலைமையா?

click me!