Dhanush : நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி... இதெல்லாம் நான் கனவுல கூட எதிர்பாக்கல - தனுஷ் ஹாப்பியோ ஹாப்பி

Published : May 11, 2022, 09:40 AM IST
Dhanush : நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி... இதெல்லாம் நான் கனவுல கூட எதிர்பாக்கல - தனுஷ் ஹாப்பியோ ஹாப்பி

சுருக்கம்

Dhanush : கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ள தனுஷ், தனது 20 பயணம் குறித்து நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் வெற்றிபெற்றாலும், தனுஷ் பல்வேறு விமர்சனங்களையெல்லாம் சந்தித்தார். ஒல்லியாக இருந்த தனுஷை பார்த்து இவனெல்லாம் ஹீரோவா என அந்த சமயத்தில் விமர்சித்தவர்கள் ஏராளம்.

அப்படி ஏளனமாக பேசியவர்களே, ப்பா என்னாமா நடிக்கிறான்யா என சொல்லும் அளவுக்கு தனது விடாமுயற்சியால் இன்று விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் தனுஷ். அவர் தற்போது சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ள தனுஷ், தனது 20 பயணம் குறித்து நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இது நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், கனவில் கூட இதெல்லாம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ள தனுஷ், தனது ரசிகர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துள்ளார். அவர்கள் தான் தனக்கு தூணாக இருந்ததாக கூறி உள்ளார்.

மேலும் தன்னை இயக்கிய இயக்குனர்கள் மற்றும் தனது தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள தனுஷ், தனது குருவும், சகோதரருமான செல்வராகவன் மற்றும் தன்னை அறிமுகப்படுத்திய தனது தந்தை கஸ்தூரி ராஜா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இறுதியில் எண்ணம் போல் வாழ்க்கை, அன்பை பரப்புங்கள், ஓம் நமச்சிவாயா” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... Vignesh shivan : காதல் கண்கட்டுதே... இணையத்தை கலக்கும் விக்கி - நயனின் லேட்டஸ்ட் ரொமாண்டிக் புகைப்படம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!