விஜய்யின் ‘தளபதி 66’ல் குவியும் நட்சத்திரங்கள்.... புதுவரவாக இணைந்த பிக்பாஸ் பிரபலம் - யார்னு தெரியுமா?

Published : May 11, 2022, 08:26 AM ISTUpdated : May 11, 2022, 09:10 AM IST
விஜய்யின் ‘தளபதி 66’ல் குவியும் நட்சத்திரங்கள்.... புதுவரவாக இணைந்த பிக்பாஸ் பிரபலம் - யார்னு தெரியுமா?

சுருக்கம்

Thalapathy vijay 66 Full cast and crew details : குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த படமாக தளபதி 66 தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இதில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 66 திரைப்படம் தயாராகி வருகிறது. தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷியாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

தளபதி 66 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அவர் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை.

குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த படமாக தளபதி 66 தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இதில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முக்கிய நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, நேற்று இப்படத்தில் நடிக்கும் மேலும் சில நடிகர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை சங்கீதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா ஆகியோர் தளபதி 66 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... Nayanthara : அம்மாவான நயன்தாராவுக்கு தொல்லை கொடுக்கும் இயக்குனர் - வெளியான ஷாக்கிங் தகவல்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!