தாடியுடன் கேஜிஎப் நாயகன் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய கேப்டனின் மகன் சண்முகபாண்டியன்

By Kanmani P  |  First Published Oct 7, 2022, 8:29 PM IST

விஜயகாந்தின் மகன் வாரிசு நடிகராக இருந்த போதிலும் போதுமான வரவேற்பை பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தி வருகிறது.


தென்னிந்திய முன்னணி நாயகர்களில் குறிப்பிடத்தக்கவர் விஜயகாந்த், அரசியல் தலைவராகவும் இருந்து மக்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ள கேப்டன் சமீபகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது ஆளே அடையாளம் தெரியாத வகையில் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

விஜயகாந்திற்கு பிரேமலதா என்கிற மனைவியும், சண்முக பாண்டியன், விஜய் பிரபாகர் அழகர்சாமி என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர். இதில் சண்முக பாண்டியன் சினிமா துறைக்கு என்ட்ரி கொடுத்துவிட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு சகாப்தம் என்னும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் சண்முக பாண்டியன். இந்த படத்தில் அவரது தந்த விஜயகாந்த் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். சாகா என்கிற பெயரில் சண்முகபாண்டியன் நடித்திருந்தார்.

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...அச்சச்சோ என்ன தான் ஆச்சு ஸ்ருதிஹாசனுக்கு.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே?

 

இந்த படத்தில் நேஹா ஹிங்கே மற்றும் சுப்ரா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தை சுரேந்திரன் இயக்கியிருந்தார். மலேசியாவுக்கு வேலை தேடி செல்லும் ஒரு கிராமத்து இளைஞன் பிற்காலத்தில் துப்பறியும் நபராகி பின்னர் சட்டவிரோத மருந்துகளை உற்பத்தி செய்யும் கும்பலை கண்காணிக்கும் கதைக்களத்தை கொண்டிருந்தது இந்த படம்.  கார்த்திக் ராஜா இசையமைப்பில் எஸ் கே பூபதி ஒளிப்பதிவில் உருவாகி இருந்த இந்த படம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை.

மேலும் செய்திகளுக்கு...ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராய் லட்சுமி... ஷாக்கிங் போட்டோஸ் இதோ

இதையடுத்து மாவீரன் என்னும் படத்தில் தோன்றினார் சண்முக பாண்டியன். தனது தந்தை பாணியை பின்பற்றி கிராமத்து நாயகனாகவே தொடர்ந்து இரு படங்களிலும் நடித்தார். மதுரை வீரன் படத்தை பி ஜி முத்தையா இயக்கியிருந்தார்.சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக மீனாட்சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் சமுத்திரக்கனி, வேல் ராமமூர்த்தி உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருந்தார்.  இந்த படம் ஜல்லிக்கட்டு தொடர்பான பிரச்சனைகளை விவரித்து இருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்ட இதுவும் கலமையான விமர்சனங்களை மட்டுமே பெற்றிருந்தது.
 

இதைத்தொடர்ந்து தற்போது மித்ரன் என்னும் படத்தில் நடித்து வருகிறார் சண்முக பாண்டியன். இந்த நிலையில் பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி வருகிறார்.  தற்போது கேஜிஎப் நாயகன் ரேஞ்சுக்கு தாடி வளர்த்தபடி கோட் சூட் உடன் இவர் கொடுத்துள்ள போட்டோ சூட் வைரல் ஆகி வருகிறது. தன்னுடைய சொந்த உழைப்பின் மூலம் தென்னிந்திய முன்னணி நாயகராக உயர்ந்து தற்போது அரசியல் தலைவராக மின்னும் விஜயகாந்தின் மகன் வாரிசு நடிகராக இருந்த போதிலும் போதுமான வரவேற்பை பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தி வருகிறது.

 

 

click me!