ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராய் லட்சுமி... ஷாக்கிங் போட்டோஸ் இதோ

Published : Oct 07, 2022, 07:29 PM ISTUpdated : Oct 07, 2022, 09:24 PM IST
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ராய் லட்சுமி... ஷாக்கிங் போட்டோஸ் இதோ

சுருக்கம்

இந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் ராய் லட்சுமி. இந்த அளவிற்கு இவர் உருமாற்றம் ஆவதால் பட வாய்ப்புகள் குவியாவா போகிறது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சூப்பர் மாடலாக அறிமுகமாகி தற்போது அறியப்படும் நாயகிகளில் ஒருவராக உள்ளார் ராய் லட்சுமி. இவர் முதல் முதலில் ஆர் வி உதயகுமார் இயக்கிய குறும்படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார்.  வால்மீகி என்னும் குறும்படத்தை தொடர்ந்து ஆர் வி உதயகுமார் இயக்கிய கற்க கசடற படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

பின்னர் பார்த்திபனுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க, பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த ராய் லட்சுமி தாம் தூம், நான் அவன் இல்லை, வாமணன், முத்திரை, இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம், அரண்மனை, சவுகார்பேட்டை, மொட்ட சிவா கெட்ட சிவா, மேதை என அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். இருந்தும் முன்னணி நாயகியாக முடியவில்லை இவரால்.

மேலும் செய்திகளுக்கு...பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா அதுல்யா ரவி.. போட்டோஸ் இதோ

 

தமிழிலும் கவர்ச்சிகளைக் கொட்டி தீர்க்கும் முக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். இதனால் இவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் உள்ளனர்.  வெள்ளை வெளேர் என இருக்கும் இவர் அரேபியன் குதிரையென ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார். தற்போது ஆனந்த பைரவி, கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ள இவர் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிரபலமாக இருக்கிறார். 

மேலும் செய்திகளுக்கு...’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்து... குழந்தையாக மாறிவிட்டேன்”.. பிரபாஸ் நெகிழ்ச்சி

அதோடு சோசியல் மீடியாவிலும் மிக ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் கடற்கரையில் பிகினியுடன் இவர் வெளியிடும் கண்கவர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக கடலுக்கு நடுவில் இருந்தபடி இவர் எடுத்துவிட்ட புகைப்படங்கள் அனைத்தும் நல்ல லைக்குகளை பெற்றது. இந்நிலையில்  இவர் நீல நிற டைட் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் ராய் லட்சுமி. இந்த அளவிற்கு இவர் உருமாற்றம் ஆவதால் பட வாய்ப்புகள் குவியாவா போகிறது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!