டாப் லெவலில் வாரிசு படத்தின் ஜிமிக்கு பொண்ணு சாங்!

By Rsiva kumar  |  First Published Dec 26, 2022, 12:56 PM IST

வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ஜிமிக்கு பொண்ணு பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதோடு, என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.


இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் வாரிசு. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 ஆம் தேதி வாரிசு படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், ஜெயசுதா, குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, பிரபு, ஆனந்தராஜ், கணேஷ் வெங்கட்ராமன், விடிவி கணேஷ், சம்யுக்தா, ஸ்ரீமன் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Music Album : A Complete Album.. Has songs in every genre.. Hero-Heroine dance numbers, melody, Mass songs etc., and are my favorites.. is bliss.. and are good..

Best album since

— Ramesh Bala (@rameshlaus)

Tap to resize

Latest Videos

தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே, தீ தலைவா, சோல் ஆஃப் வாரிசு ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வாரிசு இசை வெளியீட்டு விழா நடந்தது.

பொதுமக்கள் அடையாளத்தோடு சென்ற தனலட்சுமிக்கு... பிக்பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதில் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ஜிமிக்கு பொண்ணு பாடல் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பாடப்பட்டது. இந்தப் பாடலானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸும் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை போன்று வா தலைவா பாடலும் பட்டி தொட்டியெங்கும் பரவி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

தளபதி விஜய் வாரிசு புகைப்படங்கள்!

கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழ் மொழியைத் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகிறது. இந்தப் படம் திரையரங்கு உரிமையின் மூலமாக ரூ.139 கோடி வரையிலும், திரையரங்கு அல்லாமல் மற்ற உரிமையின் மூலமாக ரூ.150 கோடி வரையிலும் வசூல் குவித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையரங்கு உரிமையானது ரூ.20 கோடிக்கும், கேரளாவில் ரூ.7.5 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. வாரிசு படத்தில் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனமும், சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

வாரிசு ஆடியோ லாஞ்சில் விஜய் ரசிகர்கள் செய்த வேலையால்.. தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிப்பு..!

click me!