தலைவா வேற லெவல்... ரஞ்சிதமே பாடலை பாடி கொண்டு மேடையில் மாஸாக ஆட்டம் போட்ட விஜய்! வைரல் வீடியோ..!

Published : Dec 24, 2022, 11:53 PM IST
தலைவா வேற லெவல்... ரஞ்சிதமே பாடலை பாடி கொண்டு மேடையில் மாஸாக ஆட்டம் போட்ட விஜய்! வைரல் வீடியோ..!

சுருக்கம்

தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், இதில் விஜய் ரஞ்சிதமே பாடலை பாடி மேடையில் டான்ஸ் ஆடி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.  

கோலிவுட் திரையுலகின் டாப் நடிகரான, விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதே நாளில் விஜய்யின் நண்பரும், தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வெளியாகிறது. சுமார் 9 வருடங்களுக்கு பின்னர், இவர்கள் இருவரின் படங்களும் திருவிழா நாட்களை குறிவைத்து வெளியாவதால், இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றி மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்காக சொல்ல போகும் குட்டி கதை என்ன? அடுத்தடுத்து தளபதி, விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருவதால், அரசியல் நோக்கத்தில் ஏதேனும் கருத்துக்களை வெளியிடுவாரா? என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்தது.

மிகவும் அமைதியாக மேடைக்கு வந்த விஜய்...  ரசிகர்களை பார்த்து, 'என்ன உருவாகுனா உங்களுக்கு நன்றி. 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. நான் நீண்ட நாட்களாக இரத்த தானம் பற்றி பேச விரும்பினேன். அதற்கு இனம், மதம், சாதி வேறுபாடுகள் கிடையாது.. சமத்துவத்தை நாம் இரத்தத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அன்பு தான் உலகைத்தியே ஜெயிக்கும்.. என ஆக்கபூர்வமான கருத்துக்களை பேசினார்.

மேலும் மேடையில் இருந்து ரசிகர்களுக்கு ஃபிளையிங் கிஸ்ஸை பறக்க விட்ட விஜய்... பின்னர் மேடையில் இருந்தபடி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். அதே போல்... வாரிசு படத்தில் தான், பாடியுள்ள ரஞ்சிதமே பாடலை, பாடியதோடு மட்டும் இன்றி, அதற்க்கு டான்சும் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு விஜய் 1 நிமிடம் 20 நொடிகள் ஒரே டேக்கில் நடனமாடியுள்ளதாக இந்த பாடலின் டான்ஸ் மாஸ்டர் ஜானி இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?
Karuppu Box Office Collection : சூர்யாவை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாற்றிய கருப்பு... 4ம் நாள் வசூல் இத்தனை கோடியா?