விஜய் தான் சூப்பர்ஸ்டார்.. இந்த பொங்கல் நம்மலோடது! மேடையில் நம்பர்1 நம்பர்1-னு கத்தி அதகளப்படுத்திய தில் ராஜு

By Ganesh A  |  First Published Dec 24, 2022, 10:18 PM IST

வாரிசு படம் தமிழ்ல மட்டும் இல்ல தெலுங்குலையும், வட இந்தியாவிலும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என தயாரிப்பாளர் தில் ராஜு கூறி உள்ளார்.


தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு. இவர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ள அவர், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அவர் பேசியதாவது : “வாரிசு ரீமேக் படமல்ல, இது பக்கா தமிழ் படம். அனைத்து குடும்பங்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். பாட்டு, டான்ஸ், சண்டை, காமெடி, எமோஷன் என எல்லாமே படத்துல இருக்கும். இந்த பொங்கல் நம்மலோடது தான். தமிழ்ல மட்டும் இல்ல தெலுங்குலையும், வட இந்தியாவிலும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... விஜய் தான் இப்போதைய சூப்பர் ஸ்டார்! அன்று கலைஞரே ஆச்சரியப்பட்டார்? அரிய தகவலை பகிர்ந்த நடிகர் சரத்குமார்!

நடிகர் விஜய் தான் சூப்பர்ஸ்டார். சினிமாவுல மட்டுமில்ல ரியல் லைஃப்லயும் அவர் சூப்பர்ஸ்டார் தான். நான் முதன்முதலில் அவரை பார்க்க சென்றபோது அவரே எனக்கு காபி எடுத்து வந்து கொடுத்தார். 30 நிமிஷம் தான் கதை சொன்னோம். இது நல்லா இருக்கு பண்ணலாம்னு சொல்லிட்டாரு” என பேசினார்.

அதுமட்டுமின்றி தில் ராஜு பேச மேடை ஏறிய போது நம்பர் 1... நம்பர் 1 என ரசிகர்கள் கத்தத்தொடங்கினர். ரசிகர்களின் கரகோஷம் கேட்டு அவரும் நம்பர் 1... நம்பர் 1 என கத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 நடிகர் என தில் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்ளோ முக்கியமோ... தளபதி படத்துக்கு பாட்டு ரொம்ப முக்கியம் - தமன் பேச்சு

click me!