Sigma : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு - எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா?

Published : Aug 18, 2026, 01:03 PM IST
Vijay Son Jason Sanjay Directional Sigma Movie New Release Date Revealed

சுருக்கம்

Sigma Movie New Release Date : தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிக்மா திரைப்படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ஹீரோவாக அறிமுகமாவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் எழுதி இயக்கியுள்ள முதல் படத்திற்கு ‘சிக்மா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் படங்களிலும் அவ்வப்போது நடித்து வரும் சந்தீப் கிஷன், இந்த படத்தில் ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவருடன் மேலும் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநராக ஜேசன் சஞ்சயின் முதல் படம்

விஜய்யின் மகன் என்ற எதிர்பார்ப்பை தாண்டி, இயக்குநராக தனக்கென ஒரு பாதையை உருவாக்கும் முயற்சியில் ஜேசன் சஞ்சய் களமிறங்கியுள்ளார். ‘சிக்மா’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகிய பொறுப்புகளை அவரே கவனித்துள்ளார். படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Jason Sanjay: அடிக்கடி சண்டை வரும்; பிரிஞ்ச பிறகுதான் பாசம் வந்துச்சு - தங்கை திவ்யா பற்றி ஜேசன் சஞ்சய் உருக்கம்!

ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட மாற்றம்

‘சிக்மா’ திரைப்படத்தை முதலில் ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்யின் கடைசிப்படமான ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாக, ‘சிக்மா’ ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் 2026 அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jason Sanjay : அப்பா தான் பர்ஸ்ட் சாய்ஸ்... ஜேசன் சஞ்சய்யின் பேட்டியால் விஜய் ரசிகர்கள் செம குஷி!

விஜய்யின் மகன் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்குள் வந்தாலும், ஹீரோவாக அல்லாமல் இயக்குநராக தனது முதல் படத்தை உருவாக்கியுள்ள ஜேசன் சஞ்சயின் முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிப்பதால், படத்தின் கதை மற்றும் ஜேசன் சஞ்சயின் இயக்குநர் பாணி எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி ‘சிக்மா’ வெளியாக உள்ள நிலையில், ஜேசன் சஞ்சயின் முதல் படம் தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sigma : “பதவி மேல ஆசை இல்லை” விஜய் மகனின் சிக்மா ஸ்டைல் பாடலில் இதை கவனிச்சீங்களா..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Feel Good Movies : மனசு கஷ்டமா இருக்கா? இந்த 5 படங்கள் ஒரு நல்ல மருந்து!
Anupama Parameswaran : 11 குழந்தைங்க பெத்துக்க ஆசைப்பட்டேன்... கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு - ஆதங்கத்தை கொட்டிய அனுபமா