கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவச இணையதள வசதியுடன் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நான்காயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களுடன் நூலகம் திறந்துள்ளனர்.
திரைப்படங்களில் முழுமையாக கவனம் செலுத்தி நடித்து வரும் நடிகர் விஜய், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அண்மையில் பள்ளி மாணவ,மாணவிகளை நேரில் அழைத்து கல்வி உதவி தொகை வழங்கி தமிழகத்தில் அரசியல் களத்தில் கவனம் பெற்றார்.
இந்நிலையில் தற்போது மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நூலகம் துவங்கி வருகின்றனர். மாணவ,மாணவிகளிடையே புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக துவங்கப்பட்டு வரும் இந்த தளபதி விஜய் நூலகத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் கோவை தெற்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் தலைவர் கோவை விக்கி தலைமையில் கோவை கிணத்துகடவு தொகுதி, எட்டிமடை பகுதியில் விஜய் நூலகம் துவங்கப்பட்டது. நூலகத்தை துவக்கிய விக்கி மற்றும் இளைஞரணி தலைவர் பாபு ஆகியோர் பேசுகையில், இந்த நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், கதை புத்தகங்கள் மட்டுமின்றி மாணவ,மாணவிகள் நீட் தேர்வு, நுழைவு தேர்வு, வேலை வாய்ப்புகளுக்கான தகுதி தேர்வு உள்ளிட்ட தங்களது பல்வேறு விதமான தேர்வுகளை எதிர் கொள்வதற்கான தேவையான புத்தகங்களும் இங்கு இருப்பதாக கூறிய அவர், அதே நேரத்தில் இங்கு இலவச இணைய தள வசதியும் ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். நூலகம் துவக்க விழாவில், விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்... முதல் படத்திலேயே மாஸ் ஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதி மகன்... அனல்பறக்க ஆரம்பமான ஷூட்டிங் - இயக்குனர் இவரா?