ரஜினி ரூட்டில் தளபதி விஜய்! ஒன்லி ஆக்‌ஷன், நோ ரியாக்‌ஷன்: தாறுமாறாக மண்டை காயும் டைரக்டர்கள்.

By Kanimozhi PannerselvamFirst Published Jan 6, 2020, 7:24 PM IST
Highlights

தளபதி விஜய் மாஸ் ஹீரோவாக அவதாரமெடுத்த பின் அவரது படங்கள் ரஜினி படங்களின் ஸ்டைலில் இருப்பதாக ஒருc விமர்சனம் வந்தது. 

தளபதி விஜய் மாஸ் ஹீரோவாக அவதாரமெடுத்த பின் அவரது படங்கள் ரஜினி படங்களின் ஸ்டைலில் இருப்பதாக ஒருc விமர்சனம் வந்தது. ஓப்பனிங் மாஸ் பாட்டு, ஃபைட்டு, காமெடி, அதன் பின் ஒரு பாட்டு, ஃபைட்டு...என்று பக்காவான சக்ஸஸ் ஸ்ட்ரக்சருடன் இருப்பதாக விமர்சித்தார்கள். இதை விஜய் மறுக்கவும் இல்லை. இப்போது விஜய் படங்களின்  மார்க்கெட் ரஜினி படங்களை விட ஒரு மடங்கு அதிகமாகவே போய்க் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், இப்போது ரஜினியின் மிக முக்கியமான ட்ரிக் ஒன்றை விஜய் ஃபாலோ பண்ண துவங்கியிருக்கிறார்! என்று புதிய விமர்சன வெடி குண்டை பற்ற வைத்திருக்கின்றனர் சினிமா துறையின் விமர்சகர்கள் சிலர். இந்த ஸ்டைலானது விஜய் பட இயக்குநர்களை அநியாயத்துக்கு மண்டை காய விடுகிறது என்கிறார்கள். அப்படி என்ன ஸ்டைல்? அதை விமர்சகர்களே விளக்கட்டும்.“என்னதான் உச்ச நட்சத்திரமாக இருந்தாலுமே கூட, இயக்குநர்களை மதிப்பதில் ரஜினி இன்னமும் சாதாரண ஜூனியர் ஆர்டிஸ்ட் லெவல்தான். அதே அளவில்தான் விஜய்யும் டீல் பண்ணுவார். 


ரஜினி ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே, அதன் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில் தன் அடுத்த படத்துக்கான கதையை கேட்க துவங்குவார். ஷூட்டிங் பிரேக்கை விட, ஒரு ஷெட்யூல் முடிந்த பின் தனது அலுவலகத்துக்கு இயக்குநர்களை வரச்சொல்லி கதையை கேட்பார். மோஸ்ட்லி ‘ஒன்லைன்’ கதையாகத்தான் கேட்பார், அது தன்னை இம்ப்ரஸ் பண்ண வேண்டும்! என்று நினைப்பார். ரஜினியிடம் ஒன்லைன் ஸ்டோரியை இயக்குநர்கள் சொல்ல, அதில் அவர் இம்ப்ரஸ் ஆகிவிட்டார்ல் ரஜினி ‘ஹ்ஹா வாவ் வாவ், லவ்லி! ஆவ்ஸம்! சூப்பருங்க! கலக்குது போங்க! ரியலி நைஸ் சார்!’ என்று இவற்றில் ஏதோ ஒரு வார்த்தையை சொல்லி பாராட்டுவார். அடுத்து டீ, ஜூஸ் என்று ஏதாவது அவர்களை தேடி வரும், பருகுவார்கள் நிறைய பேசுவார்கள். 

எல்லாம் முடிந்து கிளம்பும் இயக்குநரும், ‘சார் ரொம்ப ஹேப்பியாகிட்டாரு என்னோட கதையில. நிச்சயம் ஓ.கே. பண்ணிடுவார், அவரோட ஆன் கோயிங் ப்ராஜெக்ட் முடிஞ்சதும் நம்ம படம்தான்.’ என்று தன் நெருங்கிய மனிதர்களிடம் ரகசியமாக சொல்லி, ஆவல் பொங்க காத்திருப்பார்கள். ஆனால்  ரஜினியிடம் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இருக்காது. அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் முடிந்து, ரிலீஸாகி, சக்கை போடு போட துவங்கும்! ரஜினியின் அழைப்பு இப்போ வரும், அப்போ வரும்...என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார் அந்த இயக்குநர்! எதுவும் நடக்காது. இந்த சுழலில் காற்றுவாக்கில்,  இன்னொரு இயக்குநரின் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளி வரும். காத்திருந்த இயக்குநரின் நெஞ்சு பஞ்சராகிவிடும்.  அதன் பிறகு இவர் வேறு நடிகர்களை வைத்துப் படம் பண்ணப் போய்விடுவார். காலங்களும் ஓடிவிடும். இந்த இயக்குநரோ, ரஜினியை வைத்துப் படம் பண்ணும் ஆசையையே மறந்துவிடுவார். 

இந்த நிலையில் திடீரென்று ரஜினியின் அலுவலகத்திலிருந்து இந்த இயக்குநருக்கு அழைப்பு வரும், இவரும் அரை மனதோடு போவார். (இப்படி ஒரு அழைப்பு வர ஓரிரு வருடங்களோ அல்லது பத்து வருடங்களோ கூட ஆகலாம்) . அங்கே பட்டையும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுமாக அமர்ந்திருக்கும் ரஜினியோ ‘கொஞ்சம் லேட்டாயிடுச்சுல்ல! நாம எப்பவோ சேர்ந்து பண்ணியிருக்க வேண்டியது. இட்ஸ் ஓகே! அப்ப என்கிட்ட ஒரு ஒன்லைன் சொன்னீங்கள்ள...’ என்றபடி அந்த ஒன்லைன் கதையை அப்படியே ஒப்புவிப்பார். இந்த இயக்குநர் அசந்து போவார். ரஜினியை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கியிருந்த அந்த செம்ம ஸ்பெஷல் ஒன்லைனை, வேறு எந்த நடிகரையும் வைத்து இயக்கியிருக்கவே மாட்டார் அந்த இயக்குநர். அதனால் மீண்டும் அதை டெவலப் பண்ணி  தற்போதைய காலத்துக்கு ஏற்ப  மாற்றி திரைக்கதை செய்ய சொல்லி, ‘நாம இப்ப இந்த படத்தை பண்ணுவோம்!’ என்பார் ரஜினி. அல்லது ஒரு வேளை அந்த ஒன்லைன் யன்படுத்தப்பட்டுவிட்டால், தனக்கு ஏற்ப ஒரு  கதையை உடனடியாக பண்ணச் சொல்லி, கூடிய விரைவில் ஷூட்டுக்கு போவார் ரஜினி. இதுதான் அவரது ஸ்டைல். இதோ இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் வரையில் இந்த ஸ்டைலைதான் ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கிறார் அவர். ரமணாவையே ரஜினியை வைத்துதான் எழுதினார் முருகதாஸ். ரமணா முடிந்த பின்னும் ரஜினியை பார்த்தார். ஆனால், ரஜினி அவரை அழைத்துப் படம் பண்ணுவதற்கு இதோ இத்தனை வருடங்களாகி இருக்கிறது.
இதுதான் ரஜினி ஸ்டைல். 

இப்போது இதே ஸ்டைலைதான் தளபதி விஜய்யும் ஃபாலோ பண்ண துவங்கியிருக்கிறார். தனது புதிய படத்தின் ஷூட் போய்க் கொண்டிருக்கையிலேயே அடுத்த படத்தை பற்றி யோசித்து, கதை கேட்க துவங்குகிறார். ஆனால் எந்த இயக்குநரிடமும் ‘ஓகே’ சொல்வதில்லை. அது எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. கணிசமான இடைவெளிக்குப் பின்னே திடீரென அந்த இயக்குநரை அழைத்து, ஓ.கே. பண்ணுகிறார். மாஸ்டர் படத்திற்குப் பிறகு தளபதியை வைத்துப் படம் பண்ண இருக்கிற டைரக்டர்! என்று பெரிய பட்டியலே உலவுகிறது. ஷங்கர், முருகதாஸ், அட்லீ என்று மெகா இயக்குநர்களில் துவங்கி மலையாளம் சித்திக், பேரரசு வரை தகவல் ஓடுகிறது. ஆனால் உண்மையில் இவர்கள் அத்தனை பேரிடமும் கதை கேட்டிருக்கிறார் விஜய். இதில் யாரை செலக்ட் பண்ணப் போகிறார்! என்பதுதான் புதிர். ஆனால் ரஜினி போல் நீண்ட வருடங்கள் எடுத்துக் கொள்வதில்லை, பல மாதங்களோ, சில வருடங்களோ எடுத்துக் கொள்கிறார். ரஜினி போலவே தங்களை அழைத்து விஜய் கதையை கேட்டுவிட்டு ‘வாவ், சூப்பரு’ என்று ஆக்‌ஷன் காட்டிவிட்டு அதன் பின் பல மாதங்களுக்கு ரியாக்‌ஷனே இல்லாமல் இருப்பது, அவரை வைத்து படம் இயக்க ஆசைப்படும் இயக்குநர்களை மண்டை காய வைத்துள்ளது.” என்று முடித்துள்ளனர். வீ ஆர் வெயிட்டிங் தளபதி!
 

click me!