நடிகர் ராதா ரவி தன்னை விஜய்யின் முதல் படத்தில், மிரட்டி தான் ஒப்புக்கொள்ள வைத்ததாக படவிழாவில் கூறியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'வெற்றி' படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான... தளபதி விஜய் நாளைய தீர்ப்பு என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஷோபா சந்திரசேகர் கதையில், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இந்த படம், 1992 ஆம் ஆண்டு வெளியானது. கீர்த்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இரண்டாவது நாயகியாக ஈஸ்வரி ராவ் நடித்திருந்தார்.
மேலும் செய்திகள்: பிரபல நடிகையுடன் பள்ளிவிழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்திகேயன்..!ஏன்..?
மேலும் வினுச்சக்ரவர்தி, ராதாரவி, கே.ஆர்.விஜயா, ஸ்ரீ வித்யா, தாமு, மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு தந்தையாக அருண் மேத்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் எஸ்.ஏ.சி தன்னை மிரட்டி நடிக்க வைத்தாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: வீட்டில் வேலைசெய்யும் ஊழியரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்! வைரலாகும் புகைப்படம்..!
இந்த படவிழாவில் பேசியபோது, உங்களுக்கு ஒரு 85 வயது இருக்குமா என எஸ்.ஏ.சியிடன் கேட்க, அவர் 81 வயது தான் ஆகிறது என கூறினார். இதை தொடர்ந்து பேசிய ராதாரவி, அவரை பார்ப்பதற்கு... அவ்வளவு வயசு ஏன்னு யாரவது சொல்வார்களா? மனசில் அழுக்கு இல்லை என அவரை புகழ்ந்து தள்ளினார். பின்னர் விஜய் கதாநாயகனாக அறிமுகமான 'நாளைய தீர்ப்பு ' படத்தில் தன்னை மிரட்டி, நீங்க விஜய்யின் தந்தைக்கு அப்பாவாக நடிக்கிறீங்க என கூறியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் எல்லாம், போனில் தான் படங்களை பற்றி பேசுவார் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.