விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் திடீர் திருப்பமாக, பல பெண்களை காப்பாற்ற கொலை செய்யும் அளவிற்கு துணிந்துள்ளார் கண்ணம்மா. இது குறித்த புரோமோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
சூழ்நிலை காரணமாக காதலித்து திருமணம் செய்த மனைவியையே சந்தேகிக்கும், கணவன் பாரதியிடம் தான் உத்தமி என்று நிரூபிக்க போராடி வரும் மனைவியை பற்றிய கதையை, பல்வேறு திருமுனைகளோடு எடுத்துள்ள சீரியல் தான் 'பாரதி கண்ணம்மா'.
ரோஷ்னி இந்த சீரியலை விட்டு விலகிய பின்னர், சீரியல் சற்று டல் அடித்தாலும்... ரோஷினியை விட தற்போது பர்பாம்மென்சில் பட்டையை கிளப்பி வருகிறார் புதிய கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷா. இரட்டை குழந்தைகள் பற்றி இத்தனைநாள் மறைக்க பட்ட ரகசியம் சமீபத்தில் தான் வெளியான நிலையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக தற்போது, மொத்த மருத்துமனையுமே தீவிர வாதிகளால் ஹைஜாக் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: பிகினி பேபியாக மாறிய ஸ்ரேயா... கடற்கரை மண்ணில் உருண்டு... பிரண்டு... குழந்தையுடன் கொண்டாடிய பிறந்தநாள்!
தீவிர வாதிகள் பிடியில் இருந்து மருத்துவமனையில் உள்ளவர்கள் தப்பிக்க முயன்று வரும் நிலையில், இதையே சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஒரு தீவிரவாதி பெண் பிணைக்கைதிகளிடம் அத்துமீறி வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், மற்ற பெண்களை காப்பாற்றுவதற்காக, தன்னையே பனையமாக வைத்து, தீவிரவாதியுடன் செல்லும் கண்ணம்மாவை அந்த தீவிரவாதி அடைய நினைக்க, இந்த அநீதியை கண்டு பொங்கி எழுந்து அவரை கத்தரி கோலால் சரமாரியாக குத்தி கொலை செய்ய துணிகிறார் கண்ணம்மா. பத்திரகாளியாக மாறி கண்ணம்மா ஆர்ப்பரித்த காட்சிகள் தான் தற்போது ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: மகாலட்சுமியுடன் தனி விமானத்தில் ஹனிமூன் சென்றாரா ரவீந்தர்?... போட்டோ போட்டு அவரே சொன்ன விளக்கம் இதோ
கற்பை காப்பாற்றி கொள்வதற்காகவும், மற்ற பெண்களை காப்பாற்றவும் கொலை செய்யும் அளவுக்கு கண்ணம்மா துணிந்ததை பார்த்தாவது பாரதி தன்னுடைய மனைவியின் மேல் உள்ள சந்தேகத்தை களைத்து அவரை மீண்டும் ஏற்றுக்கொள்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்