SIIMA விருது விழாவில்... அரபிக்குத்து பாடலுக்கு மேடையில் ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே..! வைரலாகும் வீடியோ!

By manimegalai a  |  First Published Sep 11, 2022, 9:59 PM IST

சைமா விருது விழாவில் கலந்துகொண்ட பிரபல நடிகை பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 


தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் SIIMA விருதுகள் விழா நேற்று துவங்கிய நிலையில், இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். 2022-ம் ஆண்டுக்கான SIIMA விருதுகள் விழா பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் தென்னிந்தியாவில் வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பட்டியல்களில் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

சைமா விருது விழாவில் பாலிவுட், கோலிவுட், சாண்டில்வுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், கன்னட நடிகர் யாஷ் மற்றும் பல முன்னணி நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களுக்கு மற்றும் இன்றி சில சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த, பூஜா ஹெக்டேவுக்கு, பூஜா ஹெக்டே 2022 ஆம் ஆண்டுக்கான யூத் ஐகோன் (female) என்கிற சைமா விருதையும், அதிகம் விரும்பப்பட்ட நடிகை என்கிற விருதையும் பெற்றுள்ளார். இந்த இரண்டு விருதுகளையும் வாங்கிய பின்னர், சமூக வலைத்தளத்துக்கு விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

இதை தொடர்ந்து இவரது அசத்தல் டான்ஸ் பர்ப்பாம்மென்ஸ் தான், ரசிகர்களால் அதிகம் சமூக வலைத்தளத்தில் பார்க்கப்பட்டு வருகிறது. விருது நிகழ்ச்சியின் போது, தொகுப்பாளருடன் சேர்ந்து பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற, அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வீடியோ இதோ...

Our darling at pic.twitter.com/Mak7HLsgMM

— E=mc² (@BaBaBaNaReady)

click me!