இந்த விஜய் டிவி சீரியலுக்கு ரசிகையாக மாறிய அனுஷ்கா.! சீரியல் ஹீரோ - ஹீரோயினுக்கு போனில் வாழ்த்து! வைரல் வீடியோ

By manimegalai a  |  First Published Sep 11, 2022, 9:00 PM IST

நடிகை அனுஷ்கா விஜய் டிவி சீரியலுக்கு ரசிகையாக மாறி, போன் செய்து வாழ்த்தியதாக அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 


தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து தற்போது வரை டாப் நடிகைகள் லிஸ்டில் உள்ளவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. ஒருவழியாக 40 வயதை எட்டி விட்ட இவருக்கு இன்னும் திருமணம் நடைபெற வில்லை என்பது தான் இவரது குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல, ரசிகர்களுக்கும் உள்ள மிகப்பெரிய கவலை. திருமணம் செய்து கொள்வதற்காக சில பல பூஜைகள் செய்த பிறகும் தனக்கு ஏற்ற போல், மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் இவர் நடித்து வருகிறார். தமிழில், இவர் கைவசம் எதுவும் படங்கள் இல்லை என்றாலும், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள மார்க்கெட் குறையவில்லை. இந்நிலையில், அனுஷ்கா விஜய் டிவி சீரியல் ஒன்றிற்கு மிகப்பெரிய ரசிகை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து, இந்த சீரியலின் நாயகன் மற்றும் நாயகி இருவரும்... விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்: SIIMA விருது விழாவிற்கு... பிங்க் நிற புசு புசு கவுனில் பார்பி டால் போல் வந்த பூஜா ஹெக்டே..! வைரல் போட்டோஸ்..!
 

இதுகுறித்து 'தென்றல் வந்து என்னை தொடும்' சீரியலின் ஹீரோ வினோத் பாபு பேசுகையில்... நான் சொல்லுவது அம்மா சத்தியமா உண்மை. பொய் கிடையாது காரணம் என் பொண்டாட்டி நான் சொன்னபோது நம்பவில்லை. ஒரு 20 நாட்களுக்கு முன்னணி நான் பவித்ரா அனுஷ்கா ஷெட்டியின் பர்சனல் மேனஜர் பேசுகிறேன் என்று சொன்னாங்க. நானும் யாரோ பிராங்க் பன்றாங்க என்று நினைத்து கேள்வி எழுப்பியதற்கு, நான் பாகுபலி ஹீரோயின் அனுஷ்கா உங்களிடம் பேச வேண்டும் என்று ஆசைபட்டாங்க பேசுங்கள் என்று சொன்னாங்க. அப்போது உண்மையாவே அனுஷ்கா எங்கள் இருவருக்கும் கான் கால் போட்டு, தொடர்ந்து 15 எபிசோட் பார்த்ததாகவும், எங்க அம்மா உங்க பேன். நானும் உங்களுடைய பேன் என கூறியதாக தெரிவித்தார். இது என் அம்மா சத்தியமா உண்மை என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டார்..! 'விக்ரம்' படத்திற்காக சைமா விருதை வென்ற உலக நாயகன் கமல்ஹாசன்..!
 

மேலும் செய்திகள்: குழந்தை கடத்தல்.. உளவியல் பார்வையில் கூறியுள்ளோம்! அதர்வாவின் 'டிரிக்கர்' படம் பற்றி பேசிய இயக்குனர்!
 

இவரை தொடர்த்து பேசிய பவித்ரா... அவங்க ரொம்ப ஸ்வீட்... ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தாங்க. உங்கள் சீரியல் பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது. நீங்க ரொம்ப ப்ரீடி... இப்படி எல்லாம் சொன்ன போது, தனக்கு பறப்பது போல் இருந்ததாக தெரிவித்தார். இந்த மேடை அதற்க்கு நன்றி சொல்வதற்கு சரியானதாக இருக்கும். என இந்த ப்ரோமோ வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோ இதோ... 


 

நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.. 😊

விஜய் ஸ்டார் நைட் - இப்பொழுது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவி ல.. pic.twitter.com/g7XKSdnnFS

— Vijay Television (@vijaytelevision)

 

click me!