
விஜய் ரசிகர்கள் மிக அதிகம் எதிர்பார்புடன் காத்திருந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகி, இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. விஜய் உளவுத்துறை ஏஜெண்டாக நடித்திருக்கும் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய்யின் பீஸ்ட்:
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில், விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிட்சர்ஸ் தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இரண்டு பாடல்கள் ஹிட்:
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல் இரண்டுமே நல்ல வெற்றியை ஈட்டி தந்தது. குறிப்பாக, அரபிக் குத்து பாடல் 30 நாட்களில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ஹிட் கொடுத்தது. பட்டி தொட்டி எங்கும் பல்வேறு வரவேற்புகளை பெற்று தந்தது.
5 மொழிகளில் பீஸ்ட் திரைப்படம்:
பான் இந்தியா திரைப்படமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. இதன் பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
பீஸ்ட் ட்ரைலர்:
இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் பீஸ்ட் திரைப்படத்தின் படத்தின் டிரைலர் வெளியானது. அதில், விஜய் உளவுத்துறை ஏஜெண்டாக நடித்திருக்கும் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ட்ரைலர் விமர்சனம்:
மறுபுறம் ட்ரைலர் கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. அதில் இருக்கும் காட்சிகள் பற்றி பல விதமான ட்ரோல்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன. விக்ரம் மற்றும் கூர்கா பட காட்சிகளை போலவே பீஸ்ட் படத்திலும் இருக்கிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்:
விஜய் ரசிகர்கள் மிக அதிகம் எதிர்பார்புடன் காத்திருந்த, நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகி, இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ட்ரைலர் ,12 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. இதனை விஜய் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தியேட்டரை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்:
இந்நிலையில், நடிகர் விஜய் பீஸ்ட் பட டிரெய்லர் வெளியான திருநெல்வேலி ராம் தியேட்டரின் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது படு குஷியில் இருந்த ரசிகர்கள், உற்சாகம் தலைகேறியதால், தலை கால் புரியாமல் தியேட்டரை அடித்து துவம்சம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.