
பீஸ்ட் மூவி :
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 13-ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படம் வெளியாகவுள்ளது.
மாபெரும் பொருட்செலவில் :
சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி வரும் இந்த படம் சென்னை, டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் ஜார்ஜியாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் வெளியிட்டுட்டிருந்தார். அதோடு நூறாவது நாள் படப்பிடிப்பு புகைப்படங்களும் வெளியிடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...Director Nelson : விஜய்க்காக நெல்சன் எடுத்த புதிய அவதாரம்.... பீஸ்ட் புரமோஷனில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
அனிரூத்- சிவகார்த்திகேயன் காம்போ :
நெல்சனின் முந்த படங்கள் போலவே இதிலும் சிவகார்த்திகேயன், அனிரூத் காம்போ இடம் பெற்றுள்ளது. அரபிக் குத்து என்னும் பாடலை சிவகார்த்திகேயன் எழுத அனிரூத் இசையமைத்து பாடியிருந்தார். இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. இதையடுத்து வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடியிருந்தார்.
வெயிட்டிங் போர் பீஸ்ட் அப்டேட் :
இதற்கிடையே இந்த படம் குறித்த ரசிக்கர்களின் எதிர்ப்பார்ப்பு எகிறி இருந்தது. அதற்கு தீனி போடும் வகையில் படப்பிடிப்புத்தள புகைடங்கள் வெளியாகி இருந்தாலும், டீசர் அல்லது ட்ரைலரை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரி வந்தனர். அதற்கேற்ப இன்று ட்ரைலர் வெளியாகியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தயாரிப்பு நிறுவனம் முன்னோட்டத்தை வெளியிட்டது.
மேலும் செய்திகளுக்கு...Rimi Sen: பண ஆசையில் மோசம் போன ரூ4.5 கோடி...! பாலிவுட் நடிகையிடம் சதுரங்க வேட்டையாடிய டுபாக்கூர் தொழிலதிபர்.
கூர்கா வாடை வீசும் பீஸ்ட் :
இந்த ட்ரைலரின் படி சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த மாலில் இருக்கிறார். நஜிக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மக்களை எவ்வாறு போராடி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படம் யோகி பாபு நடிப்பில் வெளியான கூர்காவுடனும், விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கியுடனும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.