பட்டியலின மக்கள் குறித்து அவதூறு.. நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்..!

Published : Apr 02, 2022, 06:32 PM IST
பட்டியலின மக்கள் குறித்து அவதூறு.. நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்..!

சுருக்கம்

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் பட்டியலின மக்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்தார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுனை கைது செய்தனர். 

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவதூறு பேச்சு

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் பட்டியலின மக்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்தார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுனை கைது செய்தனர். அதன்பின்பு அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 மீரா மிதுனுக்கு பிடிவாரண்டு 

வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நிபந்தனை ஜாமீன்

இந்நிலையில், ஜாமீன் கோரி மீரா மிதுன் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. முடிவில் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும்,  மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?