
நெல்சனின் பீஸ்ட் :
இயக்குனர் நெல்சன் நயன்தாராவின் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதோடு டாக்டர் படத்திற்காக நெல்சன் நடித்திருந்த சாங் ப்ரோமோ ரசிகர்ளை வெகுவாக ஈர்த்தது. நடிகர்கள் ரேஞ்சுக்கு பேன்சை ஈர்த்த இயக்குனர்கள் பட்டியலில் நெல்சனும் இடம் பிடித்துவிட்டார். இவர் தற்போது பீஸ் ட் படத்தை இயக்கியுள்ளார்.
பட்டையை கிளப்பிய பாடல்கள் :
இந்த படத்தில் இருந்து சமீபத்தில் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா இரு பாடல்களும் ரசிகர்ளை வெகுவாக ஈர்த்தது. இதில் அரபிக் குத்து பாடலுக்காக உருவாக்கப்பட்ட ப்ரோமோ செம ஹிட் அடித்தது. இதில் அனிரூத், சிவகார்த்திகேயன், நெல்சன் மூவரும் அடித்த லூட்டி பெரிதும் கவர்ந்தது. பின்னர் வெளியான அரபிக் குத்து 30 நாட்களில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ஹிட் கொடுத்தது. இந்த பாட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.
பின்னர் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கும் இரு ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டது. இந்த ப்ரோமோவில் விஜய் இடம் பெற்று ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதோடு விஜய் இந்த பாடலை தன் சொந்த குரலில் பாடியிருந்தார். ஆனாலும் அரபிக் குத்து அளவிற்கு இந்த பாடல் வெற்றி காணவில்லை.
மேலும் செய்திகளுக்கு ...
நீண்ட எதிர்பார்ப்பு :
வரும் ஏப்ரல் 13-ம் தேதி பீஸ்ட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்திலிருந்து விரைவில் அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் நெல்சனின் அப்டேட்டுகள் படப்பிடிப்பு தள புகைப்படங்களுடன் நின்று விட்டது.ரத்தக்கரையுடன் விஜய் இருக்கும் புகைப்படங்கள், துப்பாக்கி தாங்கிய விஜய் புகைப்படங்கள் வைரலாகின.
இன்று வெளியாகும் ட்ரைலர் :
பீஸ்ட் டீசர் வெளியிட வேண்டும் என ரசிக்கிறாள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதோடு நெல்சனின் ட்வீட்டுகளில் பதிவிடப்படும் அப்டேட் மெசேஜ்கள் புகைப்படத்துடன் நின்று விடுவதால் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் பீஸ்ட் படத்திலிருந்து ட்ரைலர் வெளியாவதை நெல்சன் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன்படி இன்று மாலை ட்ரைலர் வெளியாகவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு ...
முன் அறிவிப்புகள் வெளியீடு :
ட்ரைலர் வெளியாவதற்கு முன்னதா படக்குழுவினர் புகைப்படங்களை நெல்சன் வெளியிட்டு வந்த நெல்சன் தற்போது ஓ\மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.