Rajinikanth dance video: பழசானாலும், ஸ்டைலிலும், கிரேசும் மாறாத...ரஜினியின் நான் ஆட்டோக்காரன் ரெட்ரோ வீடியோ...

Anija Kannan   | Asianet News
Published : Apr 02, 2022, 01:41 PM IST
Rajinikanth dance video: பழசானாலும், ஸ்டைலிலும், கிரேசும் மாறாத...ரஜினியின் நான் ஆட்டோக்காரன் ரெட்ரோ வீடியோ...

சுருக்கம்

Rajinikanth dance video: சிங்கப்பூரில் நடனம் ஆடிய ரஜினியின் நான் ஆட்டோக்காரன் ரெட்ரோ வீடியோ, 27 ஆண்டுகளுக்கு பிறகு  வெளியாகி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளார்.

சிங்கப்பூரில் நடனம் ஆடிய ரஜினியின் நான் ஆட்டோக்காரன் ரெட்ரோ வீடியோ, 27 ஆண்டுகளுக்கு பிறகு  வெளியாகி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மேடையில் தோன்றி நடனம் பல பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரம் ரஜினி:

ரஜினி, தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு பட்டி தொட்டி எங்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

ரஜினி கடைசியாக சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சங்களை பெற்று, எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

ரஜினியின் 169 படம்:

இதையடுத்து, ரஜினியின் அடித்த படத்தை யார் இயக்க போவது என்பது பற்றி பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நெல்சனுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்திற்கு இயக்குனர் நெல்சன், பாஸ் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. 

27 ஆண்டுகளுக்கு பிறகு  வெளியான வீடியோ:

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மேடையில் தோன்றி நடனம் பல பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். அவர் ஆடிய  பாட்ஷா திரைப்படத்தில் வெளியான  ''நான் ஆட்டோக்காரன் பாடல்'' டிஜிட்டல் மாஸ்டரிங் முறையில் ஒலிக்கலவை செய்யப்பட்டு '' noise and grains'' என்ற யூtube பக்கத்தில் ரெட்ரோ வீடியோவாக வெளியாகியுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு  வெளியான இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இந்த பாடல் வைரமுத்து வரிகளில், தேவா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க ...Rimi Sen: பண ஆசையில் மோசம் போன ரூ4.5 கோடி...! பாலிவுட் நடிகையிடம் சதுரங்க வேட்டையாடிய டுபாக்கூர் தொழிலதிபர்..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?