அடிதடியில் இறங்கிய தாமரை..வாங்கி கட்டிக்கொள்ளும் அபிராமி..இன்றைய அல்டிமேட் சுவாரஸ்யங்கள்

Kanmani P   | Asianet News
Published : Apr 02, 2022, 12:47 PM ISTUpdated : Apr 02, 2022, 12:51 PM IST
அடிதடியில் இறங்கிய தாமரை..வாங்கி கட்டிக்கொள்ளும் அபிராமி..இன்றைய அல்டிமேட் சுவாரஸ்யங்கள்

சுருக்கம்

நீங்கள் நடிக்கிறீர்கள் என அபிராமி கூறியதால் கடுப்பான தாமரை மூக்கை உடைத்து விடுவேன் என்னை அப்படி சொன்னா என ஆக்ரோஷமாக சண்டை போடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் :

 14 போட்டியாளர்களுடன் துவங்கிய  அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து 5 வது சீசன் வரை கலந்து கொண்டு வெற்றியடையாத ஹவுஸ்மேட்ஸ் கலந்து கொண்டுள்ளனர். இதில் தாடி பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஜுலி, பாலாஜி முருகதாஸ், ஸ்ருதி, அபிராமி, அபிஷேக், அபிநவ், நிரூப், தாமரை என அறியப்பட்ட நபர்கள் உள்ளனர். 

வைல்ட் கார்ட் என்ட்ரி :

14 போட்டியாளர்களை தொடர்ந்து நிகழ்ச்சியின் பாதியில்  வைல்ட் கார்ட் என்ட்ரியாக  புதிய போட்டியாளர்கள் வரவழைக்கப்படுவார்கள் அந்த வகையில் மீண்டும் சுரேஷ் சக்ரவர்த்தி, கேபிஒய் சதீஸ், விஜய் டிவி புகழ் தீனா, சண்டி மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..Ranbir Alia wedding : ரன்பீர் ஆலியா திருமணம் எப்போது?..மருமகள் வருகை குறித்து அதிரடி பதில் தந்த நீத்து கபூர்..

தானாக வெளியேறிய போட்டியாளர்கள் :

பிக்பாஸ் அல்டிமேட்டிலும் தொகுப்பாளராக இருந்த கமல் விலகியதை அடுத்து போட்டியாளராக இருந்த வனிதா  திடீரென ஒரு நாள் இரவு கடுமையாக கழட்ட செய்து தானாகவே வெளியில் சென்றுவிட்டார். பின்னர்  உடல் நிலை கோளாறு ஏற்பட்ட காரணத்தால் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் சென்றுவிட்டார்.

15 லட்சத்துடன் வெளியேறிய ஸ்ருதி :

மற்ற பிக் பாஸ்  சீசன்கள் போலவே இதிலும் இறுதி சுற்றுக்கு செல்லாமல் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லும் வாய்ப்பு அமைக்கப்பட்டது. ஆனால் அல்டிமேட்டில்  பலபரீட்சை போட்டி நடத்தப்பட்டது இதில் ஸ்ருதி வெற்றி பெற்று 15 லட்சம் பணத்துடன் வெளியேறிவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு...Kiran dance: பீஸ்ட் பாடலுக்கு..சமந்தாவை தொடர்ந்து 90களின் கவர்ச்சி கன்னிகிரண் போட்ட குத்தாட்டம்! வைரல் வீடியோ

நானாக நானிருந்தேன் :

இறுதி கட்டத்தை நெருங்கி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் டாஸ்குகள் மூலம் நெருப்பு பற்ற வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நானாக நானிருந்தேன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பேசும் அபிராமி, தாமரையை குறிப்பிட்டு போலியாக உள்ளீர்கள் என்பது போல பேசுகிறார். அப்போது கடுப்பான தாமரை மூக்கை உடைத்து விடுவேன் என கடும் சொற்களால் கோபத்தை கொட்டும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?