Kiran dance: பீஸ்ட் பாடலுக்கு..சமந்தாவை தொடர்ந்து 90களின் கவர்ச்சி கன்னிகிரண் போட்ட குத்தாட்டம்! வைரல் வீடியோ

By Anu Kan  |  First Published Apr 2, 2022, 11:25 AM IST

Kiran dance: பீஸ்ட் படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலோடு, காத்திருக்கின்றனர். மறுபுறம், அரபிக் குத்து பாடல் 253 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. 


பீஸ்ட் படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். மறுபுறம், அரபிக் குத்து பாடல் 253 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பான் இந்தியா படமாக வரும் ஏப்ரல் 13ம் தேதி மாஸாக ரிலீஸ் ஆக உள்ளது. எனவே, இதன் பின்னணி பணிகள் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

பீஸ்ட் படத்தின் டிரைலர் ரிலீஸ்:

நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி பீஸ்ட் படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

விஜய்-நெல்சன் கூட்டணி:

வளர்ந்து வரும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் ஆகியோர் மாஸ் கட்டியுள்ளனர். மேலும்,  இப்படத்தில் யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அரபிக் குத்து பாடல்:

பீஸ்ட் படத்தில் வெளியான 2 பாடல்களும் அமோக வரவேற்பை பெற்றன. இந்த படத்திலுருந்து முதல் பாடலாக வெளியான அரபிக் குத்து 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படித்தது. அனிரூத் இசையமைத்திருந்த இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியிருந்தார். அனிரூத் இசையில் இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவி பட்டையை கிளப்பியது. 

அரபிக் குத்து பாடலுக்கு கிரண் போட்ட குத்தாட்டம்:

அரபிக் குத்து பாடலுக்கு ரசிகர்கள், நடிகை சமந்தா முதல் பாலிவுட் நாயகிகள் வரை என பலரும் ரீலிஸ் செய்து அசத்தி வருகின்றனர். இந்த பாடல் இதுவரை 253 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. முன்னதாக, ஜாக்குலின் மற்றும் ரகுல் ப்ரீத் என பலர் அரபிக் குத்து பாடலுக்கு போட்ட செம ஆட்டம் இணையத்தில் வைரலானது.

மேலும் படிக்க....Sanjeev won award: மகன் வருகையால் சஞ்சீவிற்கு கிடைத்த மிக பெரிய கௌரவம்..! படு குஷியில் ஆல்யா மானசா..!

தற்போது அந்த வரிசையில், 90ஸ் கிட்ஸ் பிரபல கவர்ச்சி நாயகி கிரணும் இடம்பெற்றுள்ளார். அரபிக் குத்து பாடலுக்கு அவர் போட்ட குத்தாட்டம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

click me!