Rimi Sen: பண ஆசையில் மோசம் போன ரூ4.5 கோடி...! பாலிவுட் நடிகையிடம் சதுரங்க வேட்டையாடிய டுபாக்கூர் தொழிலதிபர்..!

Anija Kannan   | Asianet News
Published : Apr 02, 2022, 12:27 PM IST
Rimi Sen: பண ஆசையில் மோசம் போன ரூ4.5 கோடி...! பாலிவுட் நடிகையிடம் சதுரங்க வேட்டையாடிய டுபாக்கூர் தொழிலதிபர்..!

சுருக்கம்

Rimi Sen: பாலிவுட் நடிகை ரிமி சென் என்பவரிடம்,  ரூ4.5 கோடி மோசடி செய்த தொழிலதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

பாலிவுட் நடிகை ரிமி சென் என்பவரிடம்,  ரூ4.5 கோடி மோசடி செய்த தொழிலதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

பாலிவுட் நடிகை ரிமி சென்:

பாலிவுட்டில் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரிமி சென். ஒரு சில படங்களில் மட்டுமே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்த இவருக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பிரபலம் அடைய செய்தது.

ஆண் நண்பருடன் பழக்கம்:

ரிமி சென், மும்பையில் சொந்தமாகப் படங்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரிமி சென் அந்தேரியிலுள்ள ஜிம் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தார். அங்கு அவருக்கு சிறிய அளவிலான நிதி நிறுவனம் நடத்தி கொண்டிருக்கும், கோரேகானைச் சேர்ந்த தொழிலதிபர் ரவுனக் ஜதின் வியாஸ் என்பவருடன் அறிமுகம் கிடைத்தது.

ஆசை வார்த்தை காட்டிய தொழிலதிபர்:

இதையடுத்து, இவருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் நடிகையிடம் பணம் பறிக்க முடிவு செய்த தொழிலதிபர், பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி அவரை ஏமாற்றியுள்ளார். நடிகையும் அவரை நம்பி ரூ.4.5 கோடியை முதலீடு செய்தார். இதற்காக இருவரும் ஒப்பந்தமும் செய்துகொண்டனர்.  

பண மோசடி:

இந்த பணம் விரைவாக தன்னிடம் இரட்டிப்பாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால், முதலீடு செய்யப்பட்ட பணம் தொடர்பான எந்த ஒரு தகவலும் இவருக்கு கிடைக்கவில்லை. அதேபோன்று அவரின் செல்போன் எண்களும் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றுவிட்டதாக தெரிகிறது. 

காவல் நிலையத்தில் புகார்:

இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, தொழிலதிபர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார், தொழிலதிபர் ரவுனக் ஜதின் வியாஸ் என்பவர் மீது ஐபிசி 420 மற்றும் 409 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க...Kiran dance: பீஸ்ட் பாடலுக்கு..சமந்தாவை தொடர்ந்து 90களின் கவர்ச்சி கன்னிகிரண் போட்ட குத்தாட்டம்! வைரல் வீடியோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025 பாக்ஸ் ஆபிஸில் ஓப்பனிங் கிங் யார்? முதல் நாள் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
பாலய்யாவின் மாஸ் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டாக இருந்ததா? அகண்டா 2 விமர்சனம் இதோ